பாடல் #15974
என்னைவிட்டு போகாதீங்க
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
என்னைவிட்டு போகாதீங்க இயேசப்பா எந்தன் உள்ளம் தாங்காதுங்க உம்மோடு நானும் வருகிறேன் உள்ளங்கையில் ஏந்திக் கொள்ளுங்க தாயைப் பிரிந்த குழந்தை அது அழுது புலம்புது தாயின் முகத்தைப் பார்க்க ஏங்கித்தவிக்குது தாய் உந்தன் முகத்தைக் காட்டுங்க - என் இயேசப்ப தாலாட்டி எனைத் தேற்றுங்க - 2 மேய்ப்னில்லா ஆடு அது அலைந்துரியது மேய்ப்பன் குரலை கேட்க பாடி நிற்குது என்னோடு கொஞ்சிப் பேசுங்க - என் இயேசப்பா தோள்மீது சுமந்து கொள்ளுங்க கண்ணின் மணியை இமைகள் பாதுகாக்குது ! கண்ணில் கண்ணீர் வந்தால் கைகள் துடைக்குது கண்ணுக்கு இமையாகுங்க - என் இயேசப்பா கை நீட்டி கண்ணீர் துடையுங்க