பாடல் #15961
உம்மைப் போல வேறொரு தெய்வம்
🔤 Ummaip Pola Vaeroru Theyvam
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப் போல வேறொரு தெய்வம் தேடினாலும் காணேனையா தம்மைத்தாமே பலியாய்த் தந்த தியாக அன்பை மறவேணையா இவ்வுலகம் தரமுடியாத சமாதானம் தருபவர் நீரே கலகத்தின் அதிபதியை அதட்டி விரட்டி விடுபவர் நீரே ஒருவரும் எடுத்திட முடியா சந்தோஷம் தருபவர் நீரே எவராலும் பறித்திட முடியா சுக ஜீவன் தருபவர் நீரே வியாதியில் துன்பருவோரை சுகம் தந்து காப்பவர் நீரே கலக்கத்தால் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைப்பவர் நீரே - சம்பூரண கிருபை எல்லாம் என் வாழ்வில் பொழிபவர் நீரே பரிபூரண வல்லமையினால் நிரப்பி என்றும் மகிழ்பவர் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaip Pola Vaeroru Theyvam Thaetinaalum Kaanaenaiyaa Thammaitthaamae Paliyaayth Thandha Thiyaaga Anpai Maravaenaiyaa Ivvulakam Tharamutiyaadha Samaathaanam Tharubavar Neerae Kalakatthin Athibathiyai Adhatti Viratti Vitubavar Neerae Oruvarum Etutthida Mutiyaa Santhosham Tharubavar Neerae Evaraalum Paritthida Mutiyaa Suga Jeevan Tharubavar Neerae Viyaathiyil Thunbaruvorai Sugam Thanthu Kaappavar Neerae Kalakkatthaal Kankalil Vazhiyum Kanneeraith Thutaippavar Neerae - Sampoorana Kirupai Ellaam En Vaazhvil Pozhibavar Neerae Paripoorana Vallamaiyinaal Nirappi Enrum Makizhpavar Neerae