பாடல் #15956
இரண்டு மூன்று பேர் கூடும்
🔤 Irantu Moonru Paer Kootum
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரண்டு மூன்று பேர் கூடும் இடத்தில் வருவாரே எங்கள் ஸ்தோத்திர பலிகள் ஜெபத்தை ஏற்றுக் கொள்பவரே வாருமையா எங்கள் நடுவினிலே சேருமையா எங்கள் துதிகளிலே - 3 ஆராதனைகள் பல இருந்தாலும் ஆடல் பாடல் துதி இருந்தாலும் நீரில்லையென்றால் வெறுமைதானையா கோடி ஜனங்கள் கூடி வந்தாலும் உம் பெயர் சொல்லிப் பாடி நின்றாலும் பிரசன்னம் இன்றி விடுதலை ஏதையா ஒன்றாய் கூடி துதிக்கும்போது ஒரு மனதோடு ஜெபிக்கும்போது கிரியை செய்யும் தேவன் நீர்தானே கண்ணீர்விட்டு கதறிடும்போது தேசத்திற்காகப் புலம்பிடும்போது எழுப்புதல் தந்திடும் தெய்வமும் நீர்தானே திறப்பிலே நிற்க பலனைத் தாரும் சுவரை அடைக்க வல்லமை தாரும் ஆத்தும் பாரம் தாரும் இயேசையா தலைகள் எல்லாம் தண்ணீராக கண்கள் எல்லாம் கண்ணாக மாறிடக் கிருபை தாரும் இயேசையா வியாதியினாலே வாதிக்கப்பட்டார் வறுமையினாலே பாதிக்கப்பட்டோர் விடுதலை அடைந்திட வேண்டும் இயேசையா கண்ணீர் சிறையில் அடைக்கப்பட்டோர் கவலையினாலே ஒடுக்கப்பட்டோர் ஆறுதல் அடைந்திட வேண்டும் இயேசையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irantu Moonru Paer Kootum Idatthil Varuvaarae Enggal Sthotthira Paligal Jebatthai Aerruk Kolpavarae Vaarumaiyaa Enggal Natuvinilae Saerumaiyaa Enggal Thuthigalilae - 3 Aaraadhanaigal Pala Irunthaalum Aadal Paadal Thuthi Irunthaalum Neerillaiyenraal Verumaithaanaiyaa Koti Jananggal Kooti Vanthaalum Um Peyar Sollip Paati Ninraalum Pirasannam Inri Vitudhalai Aethaiyaa Onraay Kooti Thuthikkumpothu Oru Manathotu Jepikkumpothu Kiriyai Seyyum Devan Neerthaanae Kanneervittu Katharitumpothu Thaesatthirkaagap Pulampitumpothu Ezhuppudhal Thanthitum Theyvamum Neerthaanae Thirappilae Nirka Palanaith Thaarum Suvarai Ataikka Vallamai Thaarum Aatthum Paaram Thaarum Yesaiyaa Thalaigal Ellaam Thanneeraaga Kankal Ellaam Kannaaga Maaridak Kirupai Thaarum Yesaiyaa Viyaathiyinaalae Vaathikkappattaar Varumaiyinaalae Paathikkappattor Vitudhalai Atainthida Vaentum Yesaiyaa Kanneer Siraiyil Ataikkappattor Kavalaiyinaalae Otukkappattor Aarudhal Atainthida Vaentum Yesaiyaa