பாடல் #15950
இயேசுவுக்காய் மீன்பிடிக்க அலைபாயும்
🔤 Yesuvukkaay Meenpitikka Alaipaayum
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவுக்காய் மீன்பிடிக்க அலைபாயும் கடல்மேலே மிதந்து செல்லும் எங்கள் படகு - 2 ஏலேலோ ஐலஸா . . . 2 தையர் . . . தையா . . . ஊழியக்காரன் என்பவன் போர்வீரன் போன்றவன் நன்மை செய்து தீங்கனுபவி என்ற கொள்கையுடையவன் - 2 மனைவி பிள்ளைகள் வீட்டையும் கர்த்தருக்காக இழப்பவன் பாடு என்ற சிலுவையை தன் தோள்மீது சுமப்பவன் தேசத்திற்காய் திறப்பில் நின்று தவறாமல் ஜெபிப்பவன் - ஓநாய்கள் நடுவிலே ஆட்டைப் போல் நம்மையே ஆண்டவர் இயேசு அனுப்பிவைத்தார் அவர் பணியை செய்யவே - 2 அவமானம் சூழலாம் - இதில் மரணம்கூட நேரலாம் இவையாவும் நாம் சகித்தால் ஜீவ கிரீடம் சூடலாம் - நோய்களையும் நீக்கலாம் பேய்களையும் ஓட்டலாம் ஆவியில் நிறைந்து தீர்க்கதரிசனமும் சொல்லலாம் ஒன்பது வரங்கள் இருக்கலாம் பெரும் மலையைக்கூட பெயர்க்கலாம் உண்மை அன்பு இல்லையென்றால் ஊழியம் செய்வதை நிறுத்தலாம் உண்மை அன்பு இருந்துவிட்டால் உலகத்தையே கலக்கலாம் - ஏலேலோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvukkaay Meenpitikka Alaipaayum Katalmaelae Midhanthu Sellum Enggal Pataku - 2 Aelaelo Ailasaa . . . 2 Thaiyar . . . Thaiyaa . . . Oozhiyakkaaran Enbavan Porveeran Pondravan Nanmai Seythu Theengganubavi Endra Kolkaiyutaiyavan - 2 Manaivi Pillaigal Veettaiyum Karttharukkaaga Izhappavan Paatu Endra Siluvaiyai Than Tholmeethu Sumappavan Thaesatthirkaay Thirappil Ninru Thavaraamal Jepippavan - Onaaykal Natuvilae Aattaip Pol Nammaiyae Aandavar Yesu Anuppivaitthaar Avar Paniyai Seyyavae - 2 Avamaanam Soozhalaam - Ithil Maranamkooda Naeralaam Ivaiyaavum Naam Sakitthaal Jeeva Kireedam Soodalaam - Noykalaiyum Neekkalaam Paeykalaiyum Ottalaam Aaviyil Nirainthu Theerkkatharisanamum Sollalaam Onbathu Varanggal Irukkalaam Perum Malaiyaikkooda Peyarkkalaam Unmai Anpu Illaiyenraal Oozhiyam Seyvathai Nirutthalaam Unmai Anpu Irunthuvittaal Ulakatthaiyae Kalakkalaam - Aelaelo