பாடல் #15917
விண்ணப்பம் பண்ணுகிறேன்
🔤 Vinnappam Pannukiraen
🎙 Pr. L. ஜோசப் • 💿 முழங்கால் யுத்தம் ஜெபப்பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணப்பம் பண்ணுகிறேன் மன்றாடி கெஞ்சுகிறேன் பரிந்து பேசுகிறேன் பதில் கொடும் தெய்வமே எங்கள் பிதாக்கள் பாவம் செய்தார்கள் நாங்கள் அவர்களின் அக்கிரமம் சுமந்தோம் வறுமைகள் தேசத்தில் அதிகமாகுதே வழியோர குடிசைகள் பெருகிப் போனதே கர்த்தாவே தேசத்தை உம்மிடம் திருப்பும் கற்பழிப்பும் கருக்கலைப்பும் அழிந்து போகட்டும் பூர்வ நாளைப் போல் புதிதாய் மாற்றும் கவலையும் கண்ணீரும் மறைந்து போகட்டும் தேவன் என்னை வளர்த்து ஆதரித்து வந்தீர் நானோ கலகம் செய்து எதிராய் மாறிவிட்டேன் இன்று நான் மனம் திரும்பி உம்மிடம் வந்து விட்டேன் தேவனே தேசத்தை நன்மையால் நிரப்பும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnappam Pannukiraen Manraati Kenjsukiraen Parinthu Paesukiraen Pathil Kotum Theyvamae Enggal Pithaakkal Paavam Seythaarkal Naanggal Avarkalin Akkiramam Sumanthom Varumaigal Thaesatthil Athigamaakuthae Vazhiyora Kutisaigal Perukip Ponathae Kartthaavae Thaesatthai Ummidam Thiruppum Karpazhippum Karukkalaippum Azhinthu Pogattum Poorva Naalaip Pol Puthithaay Maarrum Kavalaiyum Kanneerum Marainthu Pogattum Devan Ennai Valartthu Aadharitthu Vantheer Naano Kalakam Seythu Ethiraay Maarivittaen Inru Naan Manam Thirumpi Ummidam Vanthu Vittaen Devanae Thaesatthai Nanmaiyaal Nirappum