பாடல் #15896
ஆபிரகாமை ஆசீர்வதித்த
🔤 Aapirakaamai Aaseervathittha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே 1. செல்வி மணமகள் _________ ம் செல்வன் மணமகன் ____________ ஆ… என்றும் ஆசி பெற்று இனிது வாழவே வாழவே! வாழவே!! வாழவே!!! என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில் இன்னிசை யெழுப்பி இங்கிதமாய் இனி இணைந்து வாழவே! 2. கண்ணின் மணிபோல் கணவனும் இல்லத்தின் விளக்கெனக் காரிகையும் – ஆ… என்றும் ஆசிப்பெற்று இனிது வாழவே வாழவே! வாழவே!! வாழவே!!! இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில் இன்னிசை எழப்பி இங்கிதமாயென்றும் இணைந்து வாழவே (2) 3. அன்பும் அறனும் அங்கு ஓங்குமெனின் பண்பும் பயனும் உண்டாமே ஆ… ஆ… இன்பமாக எந்நாளும் அங்ஙனமென்றும் வாழவே வாழவே! வாழவே!! வாழவே!!! என்றுமிதே இன்பம் கொண்டிவர் வாழவே நற்புகழடைந்து நண்பருடன் சுற்றம் நயந்து வாழவே இணைந்து வாழவே 4. கல்லின் மனைபோலக் கணவனும் இல்லின் விளக்கெனக் காரிகையும் என்றும் ஆசிபெற்று இனிது வாழவே வாழவே! வாழவே! வாழவே! என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே! இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில் இன்னிசை யெழுப்பி இங்கிதமா யென்றும் இணைந்து வாழவே - இணைந்து வாழவே 5. உள்ளம் விரும்பிய செல்வமுடன் உத்தமச் சேய்களையே தாரும் நல்ல கீர்த்திகொண்டு நாளும் வாழப் பாரும் வாழவே! வாழவே! வாழவே! என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே! ஐயமது கொள்ளாது அன்பினிற் கூடியே வையகந்தனில் வல்லபிதா உம்மை வணங்கி வாழவே - வணங்கி வாழவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aapirakaamai Aaseervathittha Aandavaa Arulumae 1. Selvi Manamakal _________ M Selvan Manamakan ____________ Aa… Enrum Aasi Perru Inithu Vaazhavae Vaazhavae! Vaazhavae!! Vaazhavae!!! Enrum Aasiperru Inainthu Vaazhavae Illaramaam Inba Nallarach Solaiyil Innisai Yezhuppi Ingkidhamaay Ini Inainthu Vaazhavae! 2. Kannin Manipol Kanavanum Illatthin Vilakkenak Kaarikaiyum – Aa… Enrum Aasipperru Inithu Vaazhavae Vaazhavae! Vaazhavae!! Vaazhavae!!! Illaramaam Inba Nallarach Solaiyil Innisai Ezhappi Ingkidhamaayenrum Inainthu Vaazhavae (2) 3. Anpum Aranum Angku Ongkumenin Panpum Payanum Untaamae Aa… Aa… Inbamaaga Ennaalum Angnganamenrum Vaazhavae Vaazhavae! Vaazhavae!! Vaazhavae!!! Enrumithae Inbam Kontivar Vaazhavae Narpugazhatainthu Nanparudan Surtram Nayanthu Vaazhavae Inainthu Vaazhavae 4. Kallin Manaipolak Kanavanum Illin Vilakkenak Kaarikaiyum Enrum Aasiperru Inithu Vaazhavae Vaazhavae! Vaazhavae! Vaazhavae! Enrum Aasiperru Inainthu Vaazhavae! Illaramaam Inba Nallarach Solaiyil Innisai Yezhuppi Ingkidhamaa Yenrum Inainthu Vaazhavae - Inainthu Vaazhavae 5. Ullam Virumpiya Selvamudan Utthamach Saeykalaiyae Thaarum Nalla Keertthikontu Naalum Vaazhap Paarum Vaazhavae! Vaazhavae! Vaazhavae! Enrum Aasiperru Inainthu Vaazhavae! Aiyamathu Kollaathu Anpinir Kootiyae Vaiyakandhanil Vallapithaa Ummai Vanangki Vaazhavae - Vanangki Vaazhavae