பாடல் #15846
எருசலேம் எருசலேம் உன்னை
🔤 Erusalaem Erusalaem Unnai
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Minor
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எருசலேம் எருசலேம் உன்னை சினேகிப்போர் சுகித்திருப்பார்கள் உன் அலங்கத்துக்குள்ளே சமாதானம் உன் அரண்மனைக்குள்ளே பூரண சுகம் கர்த்தர் உன்மேல் மனம் இறங்குகிறார் ஆதரவாய் எழுந்து நிற்கிறார் தயவு செய்யும் காலம் வந்தது குறித்த நேரமும் வந்துவிட்டது விழித்தெழு சியோனே வல்லமையை தரித்துக்கொள் துரத்துண்ட இஸ்ரவேலரை துரிதமாய் கூட்டி சேர்க்கிறார் சீயோனை திரும்ப கட்டுகிறார் மகிமையிலே காட்சியளிப்பார் பூமியின் ஜனங்களுக்குள்ளே புகழ்ச்சியும் கீர்த்தியும் ஆவாய் உன்னிலிருந்து வேதம் வெளிப்படும் கர்த்தர் வசனம் பிரசித்தம் ஆகும் இரவும் பகலும் மவுனமாயிராத ஜாமக்காரர் உன் மதில்மேல் அமெரிக்கையாய் இருப்பதில்லை அமர்ந்திருக்க விடுவதில்லை மலைகள் குன்றுகள் நடுவே மிக மேலாய் நிலைநிறுத்துகிறார் மக்கள் இனம் தேடி வருவார்கள் ஓடிவந்து மீட்படைவர்கள் கர்த்தர் உன்னை விரும்பினபடியால் தெரிந்துகொண்டார் உறைவிடமாய் - அவர் அமர்ந்திருக்கும் அரியணை நீ தான் அகிலத்திற்கு வெளிச்சம் நீதான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Erusalaem Erusalaem Unnai Sinaekippor Sukitthiruppaarkal Un Alanggatthukkullae Samaathaanam Un Aranmanaikkullae Poorana Sugam Kartthar Unmael Manam Irangkukiraar Aadharavaay Ezhunthu Nirkiraar Thayavu Seyyum Kaalam Vandhathu Kurittha Naeramum Vanthuvittathu Vizhitthezhu Siyonae Vallamaiyai Tharitthukkol Thuratthunda Isravaelarai Thuridhamaay Kootti Saerkkiraar Seeyonai Thirumba Kattukiraar Makimaiyilae Kaatsiyalippaar Poomiyin Jananggalukkullae Pugazhchsiyum Keertthiyum Aavaay Unnilirunthu Vaedham Velippatum Kartthar Vasanam Pirasittham Aakum Iravum Pakalum Mavunamaayiraadha Jaamakkaarar Un Mathilmael Amerikkaiyaay Iruppathillai Amarnthirukka Vituvathillai Malaigal Kunrugal Natuvae Miga Maelaay Nilainirutthukiraar Makkal Inam Thaeti Varuvaarkal Otivanthu Meetpataivarkal Kartthar Unnai Virumpinapatiyaal Therinthukontaar Uraividamaay - Avar Amarnthirukkum Ariyanai Nee Thaan Akilatthirku Veliccham Neethaan