பாடல் #15845
வல்லமையால் இறங்கி
🎙 கிறிஸ்தவ பாடல்
வல்லமையால் இறங்கி வாங்க ஆவியானவரே வல்லமையால் நிரப்ப வாங்க ஆவியானவரே அக்கினி ஆவியே அக்கினி தாருமே அக்கினி போலவே பூமியில் நான் வாழவே சிறகடித்து பறந்து வாங்க ஆவியானவரே கரைகள் எல்லாம் போக்கிடுங்க ஆவியானவரே உறைவிடமாய் மாறிடுங்க ஆவியானவரே நிறைகுடமாய் மாற்றிங்க ஆவியானவரே நெருப்பு போல இறங்கி வாங்க ஆவியானவரே அக்கினியாய் எரிக்க வாங்க ஆவியானவரே பொன்னைப் போல புடமிடுங்க ஆவியானவரே பண்படுத்தி பயன்படுத்தும் ஆவியானவரே