பாடல் #15844
உலகம் மாயை எல்லாம்
🎙 கிறிஸ்தவ பாடல்
உலகம் மாயை எல்லாம் மாயை என் இயேசுதான் மெய்யே மெய்யி பார்வை மங்கிப் போகும் முன்னே உன் கர்த்தரை பார்த்துவிடு காது மந்தமாகுமுன்னே கர்த்தரின் வார்த்தைக்கு செவிசாய்த்திடு உன் வாலிப நாட்களில் எல்லாம் உன்னை படைத்தவரை நினைத்திடு பிறக்க காலம் ஒன்று உண்டு மீண்டும் இறக்கவும் காலம் ஒன்று உண்டு அந்த காலத்தை அறிந்தவர் கர்த்தர் ஒருவர் உண்டு இதைக் கேட்கும் வாலிபரே உன்னை படைத்தவரை நினைத்திடு நாளை கவலை நமக்கு எதற்கு தினம் இதை தான் உன்னில் உடலை மூட உடை இல்லையே என்று அதற்காய் கவலை நமக்கெதற்கு அனுதின காலத்திலே கர்த்தர் அனைத்தையுமே செய்திடுவார்