பாடல் #15810
என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி
🔤 En Aatthumaavae Karttharaith Thuthi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி அவர் நாமம் அதிசயமே! அவர் செய்ததாம் உதவிகளை மறவாமலேயே – இயேசுவை வாழ்நாள் எல்லாம் துதி செய் 1. எக்காளத்தைப் போல் சத்தம் உயர்த்தி ஏசுதேவன் இயேசுவைத் துதி பாவம் போக்கி ரோகம் நீக்கித் தூக்கி எடுத்திட்டாரே கரத்தால் தாங்கி அணைத்திட்டாரே 2. பாரில் எந்தனைப் பிரித்தெடுத்து ஜீவப்பாதை செல்லச் செய்தாரே சுத்தனாய் நான் ஜீவித்திட சுத்த ஆவி ஈந்தார் – அவருக்கு சதா துதி ஸ்தோத்திரமே 3. எண்ணிலடங்கா நன்மை அளித்தார் தம்மைத்தாமே எனக்காய் ஈந்தார் சொந்த இரத்தம் சிந்தினவர் இனி என்ன செய்திடார்? எனக்காய் யாவும் முடித்திடுவார் 4. அன்றன்றுள்ள தாம் தேவை அறிந்து நன்றாய் யாவும் அளித்திட்டாரே பதில் என் செய்வேன் ஒன்றும் இல்லை நன்றியால் – துதிப்பேன் அவரை எப்போதும் ஸ்தோத்தரிப்பேன் 5. தந்தை தாய் போலத் தேற்றி அணைத்து எந்தன் பாரம் யாவும் தீர்த்தாரே அலைபோல் சாத்தான் சீறும் போது தூங்காதுகாத்திட்டார் தூதரால் வேலி அடைத்தும் விட்டார் 6. எந்தன் இயேசுவே! உந்தன் அன்பினை என்னை விட்டே பிரிப்பவன் யார்? என்ன தொல்லை நேரிடினும் அன்பரின் கையினில் – பறிக்க யாதொன்றும் இல்லை இல்லை.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aatthumaavae Karttharaith Thuthi Avar Naamam Athisayamae! Avar Seythathaam Udhavigalai Maravaamalaeyae – Yesuvai Vaazhnaal Ellaam Thuthi Sey 1. Ekkaalatthaip Pol Sattham Uyartthi Aesudevan Yesuvaith Thuthi Paavam Pokki Rogam Neekkith Thookki Etutthittaarae Karatthaal Thaangki Anaitthittaarae 2. Paaril Endhanaip Piritthetutthu Jeevappaathai Sellach Seythaarae Sutthanaay Naan Jeevitthida Suttha Aavi Eenthaar – Avarukku Sathaa Thuthi Sthotthiramae 3. Ennilatangkaa Nanmai Alitthaar Thammaitthaamae Enakkaay Eenthaar Sondha Rattham Sinthinavar Ini Enna Seythitaar? Enakkaay Yaavum Mutitthituvaar 4. Andranrulla Thaam Thaevai Arinthu Nanraay Yaavum Alitthittaarae Pathil En Seyvaen Onrum Illai Nanriyaal – Thuthippaen Avarai Eppothum Sthottharippaen 5. Thanthai Thaay Polath Thaerri Anaitthu Endhan Paaram Yaavum Theertthaarae Alaipol Saatthaan Seerum Pothu Thoongkaathukaatthittaar Thoodharaal Vaeli Ataitthum Vittaar 6. Endhan Yesuvae! Undhan Anpinai Ennai Vittae Pirippavan Yaar? Enna Thollai Naeritinum Anbarin Kaiyinil – Parikka Yaathonrum Illai Illai.