பாடல் #15807
இந்த நாள் மட்டும் என்னை
🔤 Indha Naal Mattum Ennai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இந்த நாள் மட்டும் என்னை நடத்தி ஆதரித்து போஷித்தீரே எத்தனை நல்லவர் என் இயேசு அவர் என்றென்றும் போதுமானவர் 2. எந்தன் பாவ பாரமெல்லாம் அவர் தோளில் சுமந்து கொண்டு எனக்காய் சிலுவையில் மரித்தார் எத்தனை நல்லவர் என் இயேசு 3. எந்தன் தேவைகள் அறிவார் ஆகாயத்தின் பலகணி திறந்து எல்லாம் பூர்ணமாய் நல்கிடுவார் என் இயேசு நல்ல மேய்ப்பன் 4. மனம் பாரத்தால் அலைந்து மனம் வேதனையால் நிறைந்து மனம் உருகி நான் கதறும்போது எத்தனை நல்லவர் என் இயேசு 5. நோய்வாய் படுக்கையில் மருத்துவர் நீர் சோக நேரத்தில் ஆறுதலும் கொடும் வெயிலதில் நிழலும் நீரே எத்தனை வல்லவர் என் இயேசு 6. என்றும் நீர் கைவிடுவதில்லை புறம்பேயும் தள்ளுவதில்லை ஒருபோதும் மறப்பதில்லை எந்தன் இயேசு உண்மையுள்ளவர் 7. என் இயேசு வந்திடுவார் தன் மார்போடணைத்திடுவார் வேகம் மேகத்தில் தோன்றிடுவார் நித்ய வாழ்வைத் தந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Indha Naal Mattum Ennai Natatthi Aadharitthu Poshittheerae Etthanai Nallavar En Yesu Avar Enrenrum Pothumaanavar 2. Endhan Paava Paaramellaam Avar Tholil Sumanthu Kontu Enakkaay Siluvaiyil Maritthaar Etthanai Nallavar En Yesu 3. Endhan Thaevaigal Arivaar Aakaayatthin Palakani Thiranthu Ellaam Poornamaay Nalkituvaar En Yesu Nalla Maeyppan 4. Manam Paaratthaal Alainthu Manam Vaedhanaiyaal Nirainthu Manam Uruki Naan Katharumpothu Etthanai Nallavar En Yesu 5. Noyvaay Patukkaiyil Marutthuvar Neer Soga Naeratthil Aarudhalum Kotum Veyilathil Nizhalum Neerae Etthanai Vallavar En Yesu 6. Enrum Neer Kaivituvathillai Purampaeyum Thalluvathillai Orupothum Marappathillai Endhan Yesu Unmaiyullavar 7. En Yesu Vanthituvaar Than Maarpodanaitthituvaar Vaegam Maegatthil Thonrituvaar Nithya Vaazhvaith Thanthituvaar