பாடல் #15805
கர்த்தரின் வருகை நெருங்கிடுதே
🔤 Karttharin Varukai Nerungkituthae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் வருகை நெருங்கிடுதே காத்திருப்போம் மனம் பூரிக்குதே தேவ எக்காளம் விண் முழங்கிடவே தூதர்கள் ஆயத்தமே தேவ கிருபையே அவர் கிருபையே தேவக்குமாரன் வெளிப்படும் நாளிலே கண்ணிமைப் பொழுதே மாறிடுவோம் விண்மேகம் மறைந்திடுவோம் 1. திருடனைப் போல வந்திடுவார் தீவிரமாய் நாம் விழித்திருப்போம் சம்பத்தைச் சேர்க்கும் நாளதில் நம்மைச் சொந்தமாய் வந்தழைப்பார் 2. லோத்தின் மனைவி நினைத்திடுவோம் லோகத்தின் ஆசைகள் வெறுத்திடுவோம் லௌகீக பாரம் பெருந்தீனி தள்ளி தெய்வீகமாய் ஜொலிப்போம் 3. ஆவியின் முத்திரை பெற்றவரே ஆயத்தமாய்த் தவிக்கின்றனரே புத்திர சுவிகாரம் அடைந்திடவே பாத்திரர் ஆவோமே 4. நம் குடியிருப்போ பரத்திலுண்டே நம் கிறிஸ்தேசுவும் அங்கு உண்டே வல்லமையான தம் செயலாலே விண் மகிமை அடைவோம் 5. தாமதம் வேண்டாம் வந்திடுமே தம்திரு வாக்கு நினைத்திடுமே இயேசுவே வாரும் ஆவலைத்தீரும் ஏங்கி அழைக்கிறோமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Varukai Nerungkituthae Kaatthiruppom Manam Poorikkuthae Thaeva Ekkaalam Vin Muzhangkidavae Thoodharkal Aayatthamae Thaeva Kirupaiyae Avar Kirupaiyae Thaevakkumaaran Velippatum Naalilae Kannimaip Pozhuthae Maarituvom Vinmaegam Marainthituvom 1. Thirudanaip Pola Vanthituvaar Theeviramaay Naam Vizhitthiruppom Sambatthaich Saerkkum Naalathil Nammaich Sondhamaay Vandhazhaippaar 2. Lotthin Manaivi Ninaitthituvom Logatthin Aasaigal Verutthituvom Laukeega Paaram Peruntheeni Thalli Theyveegamaay Jolippom 3. Aaviyin Mutthirai Pertravarae Aayatthamaayth Thavikkindranarae Putthira Suvikaaram Atainthidavae Paatthirar Aavomae 4. Nam Kutiyiruppo Paratthiluntae Nam Kiristhaesuvum Angku Untae Vallamaiyaana Tham Seyalaalae Vin Makimai Ataivom 5. Thaamatham Vaentaam Vanthitumae Thamthiru Vaakku Ninaitthitumae Yesuvae Vaarum Aavalaittheerum Aengki Azhaikkiromae