பாடல் #15746
கொல்கொதா மேட்டினிலே
🔤 Kolkothaa Maettinilae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D
🥁 Beat: 3/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொல்கொதா மேட்டினிலே கொடூர பாவி எந்தனுக்காய் குற்றமில்லாத தேவ குமாரன் குருதி வடிந்தே தொங்கினார் பாவ சாபங்கள் சுமந்தாரே பாவியை மீட்க பாடுபட்டார் பாவமில்லாத தேவகுமாரன் பாதகன் எனக்காய் தொங்கினார் மடிந்திடும் மன்னுயிர்க்காய் மகிமை யாவும் இழந்தோராய் மாசில்லாத தேவகுமாரன் மூன்றாணி மீதினில் தொங்கினார் இரத்தத்தின் பெருவெள்ளம் ஓட இரட்சிப்பின் நதி என்னில் பாய ஆதரவில்லா தேவகுமாரன் அகோரக் காட்சியாய் தொங்கினார் கல்வாரி காட்சி இதோ கண்டிடுவாயே கண்கலங்க கடின மனமும் உருகிடுமே கர்த்தரின் மாறாத அன்பி னிலே உள்ளமே நீ திறவாயோ உருகும் சத்தம் நீ கேளாயோ உன் கரம் பற்றி உன்னை நடத்த உன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kolkothaa Maettinilae Kotoora Paavi Endhanukkaay Kurtramillaadha Thaeva Kumaaran Kuruthi Vatinthae Thongkinaar Paava Saabanggal Sumanthaarae Paaviyai Meetka Paatubattaar Paavamillaadha Thaevakumaaran Paadhakan Enakkaay Thongkinaar Matinthitum Mannuyirkkaay Makimai Yaavum Izhanthoraay Maasillaadha Thaevakumaaran Moonraani Meethinil Thongkinaar Ratthatthin Peruvellam Oda Iratsippin Nathi Ennil Paaya Aadharavillaa Thaevakumaaran Akorak Kaatsiyaay Thongkinaar Kalvaari Kaatsi Itho Kantituvaayae Kankalangga Katina Manamum Urukitumae Karttharin Maaraadha Anpi Nilae Ullamae Nee Thiravaayo Urukum Sattham Nee Kaelaayo Un Karam Parri Unnai Natattha Un Nenjsai Aavalaay Thattukiraar