பாடல் #15405
இந்தியன் என்று சொல்வோம்
🔤 Inthiyan Enru Solvom
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்தியன் என்று சொல்வோம் அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம் தீங்கற்ற தேசம் படைக்க நம் கைகளை இணைத்து கொள்வோம் இது எங்கள் பாரதம் - 4 இந்தியன் என்று சொல்வோம் அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம் தீங்கற்ற தேசம் படைக்க நம் கைகளை இணைத்து கொள்வோம் - 2 நம் மொழிகள் வேறாகினும் நாம் ஒரு தாய் மக்களே நம் நிறங்கள் வேறாகினும் நம்மில் வேற்றுமை இல்லையே - 2 எங்கள் பாரதம் இது எங்கள் பாரதம் - 3 இது எங்கள் பாரதம் - 4 1. யுத்தங்கள் மாறணும் சமாதானம் பிறக்கணும் ஜாதி வேற்றுமை இல்லாமல் ஒன்றாய் வாழணும் - 2 இளைஞர் சமுதாயம் இன்றே எழுந்து நீதியை நாட்டணும் - 2 நம் தேசத்தை உயர்த்தணும் 2. சோம்பலை போக்குவோம் நம் வளத்தை பெருக்குவோம் நீதி நேர்மையை கடைப்பிடித்து ஒழுக்கத்தை நாட்டுவோம் - 2 அறிவியல் அறிஞர்கள் மாபெரும் ஞானிகள் கொண்ட நம் நாடிது - 2 வளமிக்க பெரும் நாடிது இறைவன் கொடுத்த தேசத்தை வளமாய் காத்திடுவோம் கயவர்கள் கையில் தேசம் போக துளியும் விடமாட்டோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inthiyan Enru Solvom Andha Sollil Perumidham Kolvom Theenggartra Thaesam Pataikka Nam Kaigalai Inaitthu Kolvom Ithu Enggal Paaratham - 4 Inthiyan Enru Solvom Andha Sollil Perumidham Kolvom Theenggartra Thaesam Pataikka Nam Kaigalai Inaitthu Kolvom - 2 Nam Mozhigal Vaeraakinum Naam Oru Thaay Makkalae Nam Niranggal Vaeraakinum Nammil Vaerrumai Illaiyae - 2 Enggal Paaratham Ithu Enggal Paaratham - 3 Ithu Enggal Paaratham - 4 1. Yutthanggal Maaranum Samaathaanam Pirakkanum Jaathi Vaerrumai Illaamal Onraay Vaazhanum - 2 Ilainjar Samuthaayam Inrae Ezhunthu Neethiyai Naattanum - 2 Nam Thaesatthai Uyartthanum 2. Sombalai Pokkuvom Nam Valatthai Perukkuvom Neethi Naermaiyai Kataippititthu Ozhukkatthai Naattuvom - 2 Ariviyal Arinjarkal Maaperum Njaanigal Konda Nam Naatithu - 2 Valamikka Perum Naatithu Iraivan Kotuttha Thaesatthai Valamaay Kaatthituvom Kayavarkal Kaiyil Thaesam Poga Thuliyum Vidamaattom - 2