பாடல் #154
அன்போடு எம்மைப் போஷிக்கும்
🔤 Anpotu Emmaip Poshikkum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. அன்போடு எம்மைப் போஷிக்கும் பெத்தேலின் தெய்வமே முன்னோரையும் நடத்தினீர் கஷ்ட இவ்வாழ்விலே 2. கிருபாசன்முன் படைப்போம் எம் ஜெபம் ஸ்தோத்ரமும் தலைமுறையாத் தேவரீர் எம் தெய்வமாயிரும் 3. மயங்கும் ஜீவா பாதையில் மெய்ப் பாதை காட்டிடும் அன்றன்றுமே நீர் தருவீர் ஆகாரம் வஸ்திரமும் 4. இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து பிதாவின் வீட்டினில் சேர்ந்திளைப்பாருமளவும் காப்பீர் உம் மறைவில் 5. சிலுவை சுமந்தோராக அவரைப் பின்பற்றுவோம் தீரங்கொண்டுவீரராக துன்பம் நிந்தை சகிப்போம். 6. நேசர் தயவாய் நம்மோடு சொல்லும் ஒரு வார்த்தையே துக்கத்தை எல்லாம் கட்டோடு நீங்கிப்போகச் செய்யுமே 7. சாகும்பொது, திறவுண்ட வானத்தையும் ,அதிலே மகிமையினால் சூழுண்ட இயேசுவையும் காண்போமே 8. வாழ்க, சிலுவையே ! வாழ்க மோட்சத்தின் முன் தூதனே ! நீதிமான்கள் இளைப்பாற நேர் வழியாம் வாசலே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Anpotu Emmaip Poshikkum Petthaelin Theyvamae Munnoraiyum Natatthineer Kashta Ivvaazhvilae 2. Kirupaasanmun Pataippom Em Jebam Sthothramum Thalaimuraiyaath Thaevareer Em Theyvamaayirum 3. Mayangkum Jeevaa Paathaiyil Meyp Paathai Kaattitum Andranrumae Neer Tharuveer Aakaaram Vasthiramum 4. Ijjeeviya Ottam Mutinthu Pithaavin Veettinil Saernthilaippaarumalavum Kaappeer Um Maraivil 5. Siluvai Sumanthoraaga Avaraip Pinbarruvom Theerangkontuveeraraaga Thunbam Ninthai Sakippom. 6. Naesar Thayavaay Nammotu Sollum Oru Vaartthaiyae Thukkatthai Ellaam Kattotu Neengkippogach Seyyumae 7. Saakumpothu, Thiravunda Vaanatthaiyum ,athilae Makimaiyinaal Soozhunda Yesuvaiyum Kaanpomae 8. Vaazhka, Siluvaiyae ! Vaazhka Motsatthin Mun Thoodhanae ! Neethimaankal Ilaippaara Naer Vazhiyaam Vaasalae!