பாடல் #15389
நிலையில்லா உலகம் இது
🔤 Nilaiyillaa Ulakam Ithu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிலையில்லா உலகம் இது நினைவினில் எழுதி விடு நிலையான நகரம் உண்டு நித்திய சந்தோஷம் நமக்கு உண்டு நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா? இயேசுவை சந்திப்பாயா? 1. மலரை போன்ற மனித வாழ்வு உலர்ந்து வாடிடுமே மனதில் தோன்றும் வழியினில் சென்று வேதனை அடையாதே பாவத்தின் சம்பளம் மரணம் என்று நீ அறியாமல் வாழுவதேன் பரிசுத்த தேவனின் கரங்களில் வந்தால் பாக்கியம் நிச்சயமே நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா? இயேசுவை சந்திப்பாயா? 2. நிழலை போன்ற உலகின் வாழ்வு கடந்து போய் விடுமே நிஜங்கள் என்ன என்பதை அறிந்து வாழ்ந்திட அவசியமே வல்லவர் இயேசுவின் வருகை ஒரு நாள் விரைவினில் வந்திடுமே மனதினில் அவரை ஏற்றவர் மட்டும் மறுரூபம் அடைவாரே நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா? இயேசுவை சந்திப்பாயா?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nilaiyillaa Ulakam Ithu Ninaivinil Ezhuthi Vitu Nilaiyaana Nakaram Untu Nitthiya Santhosham Namakku Untu Neeyum Sinthippaayaa? Neeyum Sinthippaayaa? Yesuvai Santhippaayaa? 1. Malarai Pondra Manidha Vaazhvu Ularnthu Vaatitumae Manathil Thonrum Vazhiyinil Senru Vaedhanai Ataiyaathae Paavatthin Sambalam Maranam Enru Nee Ariyaamal Vaazhuvathaen Parisuttha Devanin Karanggalil Vanthaal Paakkiyam Nicchayamae Neeyum Sinthippaayaa? Neeyum Sinthippaayaa? Yesuvai Santhippaayaa? 2. Nizhalai Pondra Ulakin Vaazhvu Katanthu Poy Vitumae Nijanggal Enna Enbathai Arinthu Vaazhnthida Avasiyamae Vallavar Yesuvin Varukai Oru Naal Viraivinil Vanthitumae Manathinil Avarai Aertravar Mattum Maruroobam Ataivaarae Neeyum Sinthippaayaa? Neeyum Sinthippaayaa? Yesuvai Santhippaayaa?