பாடல் #1537
என் ஜெபத்தைக் கேட்கிறார்
🔤 En Jebatthaik Kaetkiraar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஜெபத்தைக் கேட்கிறார் எனக்கு அருள்கிறார் கன்மலையில் என்னை வைத்துப் பாதுகாக்கிறார் அலைகள் என்மேல் புரண்டாலும் அஞ்சிடமாட்டேன் மலைகள் என்மேல் விழுந்தாலும் பயப்படமாட்டேன் வறண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும் வழியறியாமல் திகைத்து நின்றாலும் வருத்தும் தாகம் பசியும் என்னை நெருங்கவில்லயே வழி நடத்தும் தேவன் கரம் குறுகவில்லையே வியாதி வறுமையால் சோர்ந்து விட்டாலும் வாசல் கதவுகள் எல்லாம் அடைத்துக் கொண்டாலும் ஒன்றும் என்னைக் கலங்க வைக்க முடியவில்லையே கர்த்தர் கிருபை என்னை விட்டு விலகவில்லையே கடலின் அலையில் நான் பயணம் செய்தாலும் காற்றை புயலுமாய் என்னை எதிர்த்து வந்தாலும் எதுவும் என்னைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே கர்த்தர் முன்னே செல்வதாலே கவலையில்லையே அத்திமரங்களில் இலையுதிர்ந்தாலும் திராட்சைக் கொடிகளில் கனி அழிந்தாலும் சுற்றிப் பஞ்சம் நேர்ந்த போதும் கலக்கமில்லையே கர்த்தர் கருணை என்னைத் தாங்கும் வருத்தமில்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Jebatthaik Kaetkiraar Enakku Arulkiraar Kanmalaiyil Ennai Vaitthup Paathukaakkiraar Alaigal Enmael Purantaalum Anjsidamaattaen Malaigal Enmael Vizhunthaalum Payappatamaattaen Varanda Nilatthil Naan Natanthu Senraalum Vazhiyariyaamal Thikaitthu Ninraalum Varutthum Thaagam Pasiyum Ennai Nerunggavillayae Vazhi Natatthum Devan Karam Kurugavillaiyae Viyaathi Varumaiyaal Sornthu Vittaalum Vaasal Kathavugal Ellaam Ataitthuk Kontaalum Onrum Ennaik Kalangga Vaikka Mutiyavillaiyae Kartthar Kirupai Ennai Vittu Vilakavillaiyae Katalin Alaiyil Naan Payanam Seythaalum Kaarrai Puyalumaay Ennai Ethirtthu Vanthaalum Ethuvum Ennaith Thatutthu Niruttha Mutiyavillaiyae Kartthar Munnae Selvathaalae Kavalaiyillaiyae Atthimaranggalil Ilaiyuthirnthaalum Thiraatsaik Kotigalil Kani Azhinthaalum Surrip Panjjam Naerndha Pothum Kalakkamillaiyae Kartthar Karunai Ennaith Thaangkum Varutthamillaiyae