பாடல் #1528
என் சிலுவை எடுத்து
🔤 En Siluvai Etutthu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் சிலுவை எடுத்து, என் இயேசுவே, இச்சணம் பின்செல்லுவேன். இந்நில மீதினில் எனக்காயுயிர் விட்டீர்; இரட்சகரே! எனக்குள்ள யாவும் விட்டு - என் 1.உலகும்மை விட்டிடினும் - உம் தயையால் உம்மை நான் பின் செல்லுவேன், அலகை என்மேல் பாய்ந்து அதிகமாய் எதிர்த்தாலும், அஞ்சாமல் போர்செய்து அவனை மேற்கொண்டு நான் - என் 2.என்றன் சுதந்தரத்தை - இழக்கினும் சொந்தம் நீரே எனக்கு; பந்து சனங்களும் பற்றுறு நேசரும் பகைத்துப் பழிப்பின் என் பங்கு நீரல்லவோ! - என் 3.பாடுகள் பட்டிடுவேன், - உம்மோடு நான் பாரநுகஞ் சுமப்பேன்; ஆடுகளுக்காக அரிய சீவன் தந்த அன்பான மேய்ப்பரே, ஆடுகனை மேய்ப்பேன். - என் 4.ஆசை மேற்கொள்ள விடேன், கெட்டலோக பாசம் அணுகவிடேன்; ஈசன் லோகத்திலென்றும் நேசமுடனே தங்கி மாசுகளற உந்தன் தாசனாய் விளங்கிட. - என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Siluvai Etutthu, En Yesuvae, Icchanam Pinselluvaen. Innila Meethinil Enakkaayuyir Vitteer; Iratsakarae! Enakkulla Yaavum Vittu - En 1.ulakummai Vittitinum - Um Thayaiyaal Ummai Naan Pin Selluvaen, Alakai Enmael Paaynthu Athigamaay Ethirtthaalum, Anjsaamal Porseythu Avanai Maerkontu Naan - En 2.endran Sudhandharatthai - Izhakkinum Sondham Neerae Enakku; Panthu Sananggalum Parruru Naesarum Pakaitthup Pazhippin En Pangku Neerallavo! - En 3.paatugal Pattituvaen, - Ummotu Naan Paaranuganj Sumappaen; Aatugalukkaaga Ariya Seevan Thandha Anpaana Maeypparae, Aatuganai Maeyppaen. - En 4.aasai Maerkolla Vitaen, Kettaloga Paasam Anugavitaen; Eesan Logatthilenrum Naesamudanae Thangki Maasugalara Undhan Thaasanaay Vilangkida. - En