பாடல் #1524
என் கோட்டையானவர்
🔤 En Kottaiyaanavar
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் கோட்டையானவர், என் அரணானவர், என் தேவனானவர், என் ஜீவனானவர் - 2 எந்தன் ஆற்றலாய் இருக்கின்றவர் எந்தன் அன்புக்கு சொந்தமானவர் - 2 என் அடைக்கலம் வலிமையுமவர் எதிரியினின்று என்னை மீட்டவர் - 2 துன்ப வேளையில் நான் கூப்பிடும் போது ஆலயத்திலே என் குரலை கேட்பவர் - 2 எந்தன் விளக்கை சுடர்விடச் செய்தார் எந்தன் இருட்டை வெளிச்சமாக்கினார் - 2 மான்களைப்போல விரைந்திட செய்தார் உயர்ந்த இடத்திலே என்னை நிறுத்தினார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Kottaiyaanavar, En Aranaanavar, En Devanaanavar, En Jeevanaanavar - 2 Endhan Aartralaay Irukkindravar Endhan Anpukku Sondhamaanavar - 2 En Ataikkalam Valimaiyumavar Ethiriyininru Ennai Meettavar - 2 Thunba Vaelaiyil Naan Kooppitum Pothu Aalayatthilae En Kuralai Kaetpavar - 2 Endhan Vilakkai Sudarvidach Seythaar Endhan Iruttai Velicchamaakkinaar - 2 Maankalaippola Virainthida Seythaar Uyarndha Idatthilae Ennai Nirutthinaar - 2