பாடல் #1522
என் ஐயா தினம்
🔤 En Aiyaa Thinam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஐயா, தினம் உனை நம்பி நான் இருப்ப தறியாயோ? - மன தேங்கும் என் கலி நீங்கும் படி நல் பாங்கு புரியாயோ? அன்னை யிடத்தில் என்னை உருவதாய் வகுத்தவா, கிறிஸ்தையா எனதையா, அருள் செய்யாதது மெய்யா இது? - என் 1.குற்றத்தால் உனைக்கிட்ட என் மனம் கூசி நாணுதே; - என்தன் கோதும் நான் செய்த தீதும் மனதில் கூடத் தோணுதே; சுற்றும் உலகச் சத்துருப் பகை சூழக் காணுதே; சுருதி மொழி உறுதி தனைக் கருதி வந்தேன்; பொறுதி அருள்! - என் 2.அத்தனே, உன்றன் ரத்தத்தால் எனை ஆற்றித் தேற்றையா - தேவ ஆவியாகிய ஈவெனும் உன தருளை ஊற்றையா, நித்தனே, என்றன் குற்றத்தை எல்லாம் நீக்கி ஆற்றையா, நேசா, பவ நாசா, மறை வாசா, ஏசு, ராசா அருள்! - என் 3.உன்னை அல்லாமல் பின்னை வேறெனக் குதவி இல்லையே; - என துற்ற ஜனமும் சுற்றத் தோர்களும் உரிமை இல்லையே; பின் எவரிடம் போவேன், சொல்? அது பெரிய தொல்லையே; பேசும் விசு வாசம் வளர் நேசக் கதிர் வீச அருள்! - என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aiyaa, Thinam Unai Nampi Naan Iruppa Thariyaayo? - Mana Thaengkum En Kali Neengkum Pati Nal Paangku Puriyaayo? Annai Yidatthil Ennai Uruvathaay Vakutthavaa, Kiristhaiyaa Enathaiyaa, Arul Seyyaadhathu Meyyaa Ithu? - En 1.kurtratthaal Unaikkitta En Manam Koosi Naanuthae; - Enthan Kothum Naan Seytha Theethum Manathil Koodath Thonuthae; Surrum Ulakach Satthurup Pakai Soozhak Kaanuthae; Suruthi Mozhi Uruthi Thanaik Karuthi Vanthaen; Poruthi Arul! - En 2.atthanae, Undran Ratthatthaal Enai Aarrith Thaerraiyaa - Thaeva Aaviyaakiya Eevenum Una Tharulai Oorraiyaa, Nitthanae, Endran Kurtratthai Ellaam Neekki Aarraiyaa, Naesaa, Pava Naasaa, Marai Vaasaa, Aesu, Raasaa Arul! - En 3.unnai Allaamal Pinnai Vaerenak Kudhavi Illaiyae; - Ena Thurtra Janamum Surtrath Thorkalum Urimai Illaiyae; Pin Evaridam Povaen, Sol? Athu Periya Thollaiyae; Paesum Visu Vaasam Valar Naesak Kathir Veesa Arul! - En