பாடல் #152
அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
🔤 Anpae Vitaamal Saertthuk Konteer
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர் சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும் தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர் பிரவாக அன்பில் பாய்ந்தென்றும் ஜீவாறாய்ப் பெருகும். 2. ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம் நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே பேர் ஒளிக் கதிரால் உள்ளம் மேன்மேலும் ஸ்வாலிக்கும். 3. பேரின்பம் நோவில் என்னைத் தேடும்! என் உள்ளம் உந்தன் வீடே என்றும் கார் மேகத்திலும் வான ஜோதி! விடியுங்காலை களிப்பாம்! உம் வாக்கு மெய் மெய்யே. 4. குருசே! என் வீரம் திடன் நீயே உந்தன் பாதம் விட்டென்றும் நீங்கேன் வீண் மாயை யாவும் குப்பை நீத்தேன் விண் மேனியாய் நித்திய ஜீவன் வளர்ந்து செழிக்கும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Anpae Vitaamal Saertthuk Konteer Sorndha En Nenjjam Ummil Aarum Thanthaen En Jeevan Neerae Thantheer Piravaaga Anpil Paaynthenrum Jeevaaraayp Perukum. 2. Jothi! En Aayul Murrum Neerae Vaitthaen Ummil En Mangkum Theebam Neer Moottuveer Um Jothiyaalae Paer Olik Kathiraal Ullam Maenmaelum Svaalikkum. 3. Paerinbam Novil Ennaith Thaetum! En Ullam Undhan Veetae Enrum Kaar Maegatthilum Vaana Jothi! Vitiyungkaalai Kalippaam! Um Vaakku Mey Meyyae. 4. Kurusae! En Veeram Thidan Neeyae Undhan Paadham Vittenrum Neengkaen Veen Maayai Yaavum Kuppai Neetthaen Vin Maeniyaay Nitthiya Jeevan Valarnthu Sezhikkum.