பாடல் #1516
என் உள்ளங் கவரும்
🔤 En Ullang Kavarum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உள்ளங் கவரும் நீர் மரித்த இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட. என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு இரத்தம், தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை. - என் 1.உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன், உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன், எந்தையே, நானும்மைச் சேர்ந்தவனாயினும் இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட. - என் 2.சுத்த கிருபையின் வல்லமையால் என்னை முத்திரியும் உமக்கூழியம் செய்திட, அத்தனே, உம்மில் நல் நம்பிக்கையாய் உந்தன் சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட - என் 3.உந்தனடிதனில் உறைந்து தனித்து ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம்; என் தேவனே, அதி நேசமாய் உம்முடன் இன்ப சம்பாஷணை செய்வதே ஆனந்தம். - என் 4.அம்பரா, மரண ஆழி தாண்டும் வரை அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு; என் பரனே, உந்தன் அன்பின் ஆழத்தை நான் இம்மையில் கூடியமட்டும் அறிந்திட - என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Ullang Kavarum Neer Marittha Inbak Kurusantai Innum Nerungkida. En Paavam Pokkavae Eettiyaal Kutthuntu Rattham, Thanneer Vazhinthotum Vilaavantai. - En 1.undhan Makaa Inba Sattham Naan Kaettavan, Umathaacchariya Anpai Unarndhavan, Enthaiyae, Naanummaich Saerndhavanaayinum Innum Nerungki Naan Ummantai Saernthida. - En 2.suttha Kirupaiyin Vallamaiyaal Ennai Mutthiriyum Umakkoozhiyam Seythida, Atthanae, Ummil Nal Nampikkaiyaay Undhan Sitthamae En Sitthamaagap Pizhaitthida - En 3.undhanatidhanil Urainthu Thanitthu Or Mani Naeram Kazhippathae Paakkiyam; En Devanae, Athi Naesamaay Ummudan Inba Sampaashanai Seyvathae Aanandham. - En 4.ambaraa, Marana Aazhi Thaantum Varai Ariya Mutiyaa Anpin Aazham Untu; En Paranae, Undhan Anpin Aazhatthai Naan Immaiyil Kootiyamattum Arinthida - En