பாடல் #1504
என் இயேசுவே உம்மை அல்லால்
🔤 En Yesuvae Ummai Allaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசுவே உம்மை அல்லால் மண்ணில் ஆறுதல் ஒன்றுமே கண்டிலேன் சுக செல்வ மகிமை பெருமையிலெங்கும் இன்பம் தரும் பொருள் காணேன் தாகம் பெருகும் தண்ணீரேயன்றி லோகம் வேறொன்றும் நல்காதே ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையும் நீர் பெலனுமே நாதா ஆகையால் பூமி நிலை மாறினாலும் அஞ்சேன் கடல் பொங்கினாலும் பாழ்மணல் பாதையில் எரியும் வெயிலில் பரனே உம் கிருபையின் நிழலில் பாடி மகிழ்வேன் குருசை புகழ்வேன் பேரின்ப நாட்டில் நான் வாழ்வேன் என் நேசர் இயேசுவில் நித்தமும் சார்ந்து பரதேச யாத்திரை செய்வேன் பாரினில் பொங்கும் துயரங்கள் தங்கும் பாரங்கள் ஏதும் நானறியேன் உமதன்பின் இனிமையை என்றும் ருசிப்பேன் உலகின் வினைகள் மறப்பேன் உருகும் என் நெஞ்சம் அருளும் நல் தஞ்சம் பெருகும் என் இதயத்தின் இன்பம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesuvae Ummai Allaal Mannil Aarudhal Onrumae Kantilaen Suga Selva Makimai Perumaiyilengkum Inbam Tharum Porul Kaanaen Thaagam Perukum Thanneeraeyanri Logam Vaeronrum Nalkaathae Aabatthuk Kaalatthil Anukoolamaana Thunaiyum Neer Pelanumae Naathaa Aakaiyaal Poomi Nilai Maarinaalum Anjsaen Katal Pongkinaalum Paazhmanal Paathaiyil Eriyum Veyilil Paranae Um Kirupaiyin Nizhalil Paati Makizhvaen Kurusai Pugazhvaen Paerinba Naattil Naan Vaazhvaen En Naesar Yesuvil Nitthamum Saarnthu Parathaesa Yaatthirai Seyvaen Paarinil Pongkum Thuyaranggal Thangkum Paaranggal Aethum Naanariyaen Umathanpin Inimaiyai Enrum Rusippaen Ulakin Vinaigal Marappaen Urukum En Nenjjam Arulum Nal Thanjjam Perukum En Idhayatthin Inbam