பாடல் #150
தேவ சமாதானம் கிருபையே
🔤 Thaeva Samaathaanam Kirupaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ சமாதானம் கிருபையே தேவ சந்தோஷமும் நிறைவாயே தேவாசீர்வாதங்கள் தங்கிடவே தேவன் அருள் ஈவாரே 1. ஆனிக் கடாவின கரமதே அன்புடன் உன்னை அணைக்கின்றதே வல்லமை உன்மீது பாய்ந்திடவே கர்த்தர் வலக்கை நீட்டுகிறார் 2. இத்தனை ஆண்டுகள் சுமந்தாரே இன்றைக்கும் உன் இயேசு மாறிடாரே கலங்காதே திகையாதே உன் உள்ளமே கர்த்தர் துணை நிற்க்கிறார் 3. தேவ சித்தம் என்றும் செய்திடுவாய் தேவகுமாரன் உன்னோடிருப்பார் உன்மேல் தம் கண்ணை வைத்து ஆலோசனை தந்து உன்னை நடத்திடுவார் 4. கன்மலை மேல் வீட்டை கட்டுவாயே கர்த்தரின் கற்பனை கைக்கொள்வாயே உத்தம சாட்சியாய் நின்றிலங்குவாயே ஊழியம் செய்குவாயே 5. நல்ல தீர்க்காயுள் பெருகிடவே நித்திய ஜீவனும் பெற்றிடவே பக்தர்கள் பந்தியில் பங்கடைந்திடவே பரன் தயை புரிவார் 6. வாழ்நாளெல்லாம் களிகூர்ந்திடவே வாடாத கிருபை ஈந்திடுமே கிருபை கிருபை என்றென்றுமுள்ளதே கர்த்தரை வாழ்த்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Samaathaanam Kirupaiyae Thaeva Santhoshamum Niraivaayae Thaevaaseervaadhanggal Thangkidavae Devan Arul Eevaarae 1. Aanik Kataavina Karamathae Anpudan Unnai Anaikkindrathae Vallamai Unmeethu Paaynthidavae Kartthar Valakkai Neettukiraar 2. Itthanai Aantugal Sumanthaarae Inraikkum Un Yesu Maaritaarae Kalangkaathae Thikaiyaathae Un Ullamae Kartthar Thunai Nirkkiraar 3. Thaeva Sittham Enrum Seythituvaay Thaevakumaaran Unnotiruppaar Unmael Tham Kannai Vaitthu Aalosanai Thanthu Unnai Natatthituvaar 4. Kanmalai Mael Veettai Kattuvaayae Karttharin Karpanai Kaikkolvaayae Utthama Saatsiyaay Ninrilangkuvaayae Oozhiyam Seykuvaayae 5. Nalla Theerkkaayul Perukidavae Nitthiya Jeevanum Perridavae Paktharkal Panthiyil Panggatainthidavae Paran Thayai Purivaar 6. Vaazhnaalellaam Kalikoornthidavae Vaataadha Kirupai Eenthitumae Kirupai Kirupai Enrenrumullathae Karttharai Vaazhtthituvom