பாடல் #1491
என் ஆவி ஆன்மா தேகமும்
🔤 En Aavi Aanmaa Thaegamum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் ஆவி ஆன்மா தேகமும் இதோ படைக்கிறேன்; என்றும் உம் சொந்தமாகவும் பிரதிஷ்டை செய்கிறேன். 2. ஆ, இயேசு, வல்ல ரட்சகா உம் நாமம் நம்புவேன்; ரட்சிப்பீர், மா தயாபரா, உம் வாக்கை வேண்டுவேன். 3. எப்பாவம் நீங்க, உறுப்பு தந்தேன் சமூலமாய்; போராட்டம் வெற்றி சிறப்பு படைக்கலங்களாய். 4. நான் உம்மில் ஜீவித்தல் மகா மேலான பாக்கியம்; தெய்வ சுதா, என் ரட்சகா, என் ஜீவனாயிரும். 5. என் நாதா, திரு ரத்தத்தால் சுத்தாங்கம் சொந்தமே; ஆனேன்! உம் தூய ஆவியால் பலி நான் உமக்கே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Aavi Aanmaa Thaegamum Itho Pataikkiraen; Enrum Um Sondhamaagavum Pirathishtai Seykiraen. 2. Aa, Yesu, Valla Ratsakaa Um Naamam Nampuvaen; Ratsippeer, Maa Thayaabaraa, Um Vaakkai Vaentuvaen. 3. Eppaavam Neengga, Uruppu Thanthaen Samoolamaay; Poraattam Verri Sirappu Pataikkalanggalaay. 4. Naan Ummil Jeevitthal Makaa Maelaana Paakkiyam; Theyva Suthaa, En Ratsakaa, En Jeevanaayirum. 5. En Naathaa, Thiru Ratthatthaal Sutthaanggam Sondhamae; Aanaen! Um Thooya Aaviyaal Pali Naan Umakkae.