பாடல் #1490
என் ஆயனாய் இறைவன்
🔤 En Aayanaay Iraivan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆயனாய் இறைவன் இருக்கின்றபோது என் வாழ்விலே குறைகள் என்பது ஏது? என்னை அவர் பசும்புல் பூமியிலே எந்நேரமும் நடத்திடும் போதினிலே - 2 என்றும் இன்பம் ஆ ... ஆ என்றும் இன்பம் ஆ... ஆ என்றென்றும் இன்பமல்லவா! என்னோடவர் வாழ்ந்திடும் போதினிலே எங்கே இருள் படர்ந்திரும் பாதையிலே - 2 எங்கும் ஒளி ஆ... ஆ எங்கும் ஒளி ஆ... ஆ எங்கெங்கும் ஒளி அல்லவா! என்னை அவர் அன்பால் நிரப்பியதால் எல்லோர்க்குமே நண்பனாய் ஆக்கியதால் - 2 என்னுள்ளமே ஆ... ஆ - என் தேவனை ஆ... ஆ எந்நாளும் புகழ்ந்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aayanaay Iraivan Irukkindrapothu En Vaazhvilae Kuraigal Enbathu Aethu? Ennai Avar Pasumpul Poomiyilae Ennaeramum Natatthitum Pothinilae - 2 Enrum Inbam Aa ... Aa Enrum Inbam Aa... Aa Enrenrum Inbamallavaa! Ennodavar Vaazhnthitum Pothinilae Engkae Irul Patarnthirum Paathaiyilae - 2 Engkum Oli Aa... Aa Engkum Oli Aa... Aa Engkengkum Oli Allavaa! Ennai Avar Anpaal Nirappiyathaal Ellorkkumae Nanpanaay Aakkiyathaal - 2 Ennullamae Aa... Aa - En Devanai Aa... Aa Ennaalum Pugazhnthitumae