பாடல் #1478
என் ஆத்தும நேசர் மேய்ப்பரே
🔤 En Aatthuma Naesar Maeypparae
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் ஆத்தும நேசர் மேய்ப்பரே! என் உள்ளத்தின் ஆனந்தமே! இன்னும் உம்மைக் கிட்டச் சேர நான் வாஞ்சையோடு சமீப்பிக்கிறேன். பேசும்! பேசும்! ஜெபம் செய்யும்போது ஆண்டவா! பிரியமானதை இப்போ காட்டும் செய்ய ஆயத்தம். 2. மெய் மீட்பர்க்குக் கீழ்ப்படிவோர் தம் ஆத்மத்தைத் தேற்றும் இடம் அடியேனும் பெற அருள்வீர் அப்பனே! விண்ணப்பம் கேளுமே. 3. பாவிகட்கு உமது அன்பை என் நடையால் காட்டச் செய்யும் கல்வாரி ஆவியால் உள்ளத்தை போரில் வெல்ல அருளுமே. 4. என் ஜீவிய நாட்களெல்லாம் நீர் நடந்த பாதை செல்வேன் ஆசித்துத் தாறேன் எனதெல்லாம் மீட்பரே! வல்லமை தந்திடும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Aatthuma Naesar Maeypparae! En Ullatthin Aanandhamae! Innum Ummaik Kittach Saera Naan Vaanjsaiyotu Sameeppikkiraen. Paesum! Paesum! Jebam Seyyumpothu Aandavaa! Piriyamaanathai Ippo Kaattum Seyya Aayattham. 2. Mey Meetparkkuk Keezhppativor Tham Aathmatthaith Thaerrum Idam Atiyaenum Pera Arulveer Appanae! Vinnappam Kaelumae. 3. Paavigatku Umathu Anpai En Nataiyaal Kaattach Seyyum Kalvaari Aaviyaal Ullatthai Poril Vella Arulumae. 4. En Jeeviya Naatkalellaam Neer Natandha Paathai Selvaen Aasitthuth Thaaraen Enathellaam Meetparae! Vallamai Thanthitum.