பாடல் #1449
எந்நாளுந் துதித்திடுவீர்
🔤 Ennaalun Thuthitthituveer
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்நாளுந் துதித்திடுவீர், - அந்த இசர வேலின் ஏகோவா வைநீர். இந்தநற் சாதியிற் சிந்தையாய்ச் சாலவே, விந்தைபு ரிந்திடு மெந்தைப ரன்றனை. - எந் 1.கர்த்தாவின் வழிசெய்யவும், - தீமை கட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும் கெம்பீர மாகச் சொல்லவும், சுத்தனே யானாய் கர்த்தர்முன் போவாய், கண்டுகொள் பாலா இந்தசொல் மாளா, - எந் 2.தன்னாடு தனைச் சந்தித்து - மீட்டுத் தாட்டிகப் பகைவரை ஓட்டிட உலகினில் தாசன்தா வீது வம்சத்து இன்பர சஷண்யக் கொம்பைத் தந்தான், இதோநீர் கண்டு சிந்தையாய் நின்று. - எந் 3.அந்தகாரத்திலிருப்போர் - சாவின் ஆழவி ருள் தனிற் காலங்கள் போக்குவோர் அங்குபிர காசமடைந்து அந்தச மாதான உந்தரங் கண்டிட ஆதித்தன் தோன்றினார் ஜாதிக ளேநீர். - எந் 4.விந்தைப்பி தாவவர்க்கும் - ஏக வித்தான யேசு ரசஷக னார்க்கும் வீவிலா ஆவியவர்க்கும் சந்ததம் மகிமை சந்ததமென்று சற்றுநீர் சொல்லிப் பற்றுடன் அள்ளி. - எந்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaalun Thuthitthituveer, - Andha Isara Vaelin Aekovaa Vaineer. Indhanar Saathiyir Sinthaiyaaych Saalavae, Vinthaipu Rinthitu Menthaiba Randranai. - En 1.kartthaavin Vazhiseyyavum, - Theemai Kattotae Neekkum Ratsippai Yaarkkum Kempeera Maagach Sollavum, Sutthanae Yaanaay Karttharmun Povaay, Kantukol Paalaa Indhasol Maalaa, - En 2.thannaatu Thanaich Santhitthu - Meettuth Thaattigap Pakaivarai Ottida Ulakinil Thaasanthaa Veethu Vamsatthu Inbara Sashanyak Kompaith Thanthaan, Ithoneer Kantu Sinthaiyaay Ninru. - En 3.andhakaaratthiliruppor - Saavin Aazhavi Rul Thanir Kaalanggal Pokkuvor Angkupira Kaasamatainthu Andhasa Maathaana Undharang Kantida Aathitthan Thonrinaar Jaathiga Laeneer. - En 4.vinthaippi Thaavavarkkum - Aega Vitthaana Yaesu Rasashaka Naarkkum Veevilaa Aaviyavarkkum Sandhatham Makimai Sandhathamenru Sarruneer Sollip Parrudan Alli. - En