பாடல் #1418
எந்தன் ஆன்மா ஆண்டவரை
🔤 Endhan Aanmaa Aandavarai
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றி புகழுகின்றது அல்லேலூ, அல்லேலூ, அல்லேலூயா அல்லேலூ, அல்லேலூ, அல்லேலூயாவே எந்தன் மீட்பராம் கடவுளை நினைத்து இதயம் களி கூருகின்றது ஏனெனில் அடிமை என் தாழ் நிலையை கடவுள் கடைக்கண் நோக்கினார் இந்நாள் முதலாய் தலைமுறைகள் பேறுடையாள் என்று எனைப் போற்றுமே எந்தன் வாழ்விலே வல்லமை மிக்கவர் அரும் பெரும் செயல் பல புரிந்தார் அவரது திருப் பெயர் புனித மாகும் அவரது இரக்கம் என்றுமுள்ளது அஞ்சு வோர்க் கெல்லாம் அவர் இரக்கம் என்றென்றும் அவர் வாழ்வில் உள்ளதாமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Aanmaa Aandavarai Aetthip Porri Pugazhukindrathu Allaeloo, Allaeloo, Allaelooyaa Allaeloo, Allaeloo, Allaelooyaavae Endhan Meetparaam Katavulai Ninaitthu Idhayam Kali Koorukindrathu Aenenil Atimai En Thaazh Nilaiyai Katavul Kataikkan Nokkinaar Innaal Mudhalaay Thalaimuraigal Paerutaiyaal Enru Enaip Porrumae Endhan Vaazhvilae Vallamai Mikkavar Arum Perum Seyal Pala Purinthaar Avarathu Thirup Peyar Punidha Maakum Avarathu Irakkam Enrumullathu Anjsu Vork Kellaam Avar Irakkam Enrenrum Avar Vaazhvil Ullathaamae