பாடல் #1417
எந்தன் ஆத்தும நேசரே
🔤 Endhan Aatthuma Naesarae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் ஆத்ம நேசரே, வெள்ளம் போன்ற துன்பத்தில் தாசன் திக்கில்லாமலே தடுமாறிப்போகையில், தஞ்சம் தந்து, இயேசுவே, திவ்விய மார்பில் காருமேன், அப்பால் கரையேற்றியே மோட்ச வீட்டில் சேருமேன். வல்ல தேவரீர் அல்லால் வேறே தஞ்சம் அறியேன், கைவிடாமல் நேசத்தால் ஆற்றித் தேற்றித் தாங்குமேன், நீரே என்தன் நம்பிக்கை, நீர் சகாயம் செய்குவீர், ஏதுமற்ற ஏழையை செட்டையால் மூடுவீர். குறையாவும் நீக்கிட, நாதா, நீர் சம்பூரணர், திக்கற்றோரைத் தாங்கிட நீரே மா தயாபரர், நான் அசுத்த பாவிதான், நீரோ தூயர் தூயரே, நான் அநீதி கேடுள்ளான், நீர் நிறைந்த நித்தியரே, பாவம் யாவும் மன்னிக்க ஆரருள் அமைந்த நீர் என்னைச் சுத்திகரிக்க அருள் பாயச் செய்குவீர், ஜீவ ஊற்றாம் இயேசுவே, என்தன் தாகம் தீருமேன், ஸ்வாமீ, என்றும் என்னிலே நீர் சுரந்து ஊறுமேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Aathma Naesarae, Vellam Pondra Thunbatthil Thaasan Thikkillaamalae Thatumaarippokaiyil, Thanjjam Thanthu, Yesuvae, Thivviya Maarpil Kaarumaen, Appaal Karaiyaerriyae Motsa Veettil Saerumaen. Valla Thaevareer Allaal Vaerae Thanjjam Ariyaen, Kaivitaamal Naesatthaal Aarrith Thaerrith Thaangkumaen, Neerae Enthan Nampikkai, Neer Sakaayam Seykuveer, Aethumartra Aezhaiyai Settaiyaal Mootuveer. Kuraiyaavum Neekkida, Naathaa, Neer Sampooranar, Thikkarroraith Thaangkida Neerae Maa Thayaabarar, Naan Asuttha Paavithaan, Neero Thooyar Thooyarae, Naan Aneethi Kaetullaan, Neer Niraindha Nitthiyarae, Paavam Yaavum Mannikka Aararul Amaindha Neer Ennaich Sutthigarikka Arul Paayach Seykuveer, Jeeva Oorraam Yesuvae, Enthan Thaagam Theerumaen, Svaamee, Enrum Ennilae Neer Suranthu Oorumaen.