பாடல் #1406
பரிசுத்த குலம் நீங்கள் பலியிட வாருங்கள்
🔤 Parisuttha Kulam Neenggal Paliyida Vaarunggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த குலம் நீங்கள் பலியிட வாருங்கள் இறைவனுக்குரியவர்கள் என்றும் இறைபுகழ் கூறுங்கள் அரச குருத்துவமே தூய ஆவியின் ஆலயமே இறைவன் அழைத்த இனமே இதை அறிந்து வாழ்மனமே ஒளியின் மைந்தர் நீங்கள் இந்த உலகினில் ஒளிர்ந்திடுங்கள் முடிவில்லா வாழ்வதையே நீங்கள் முதன்முதல் தேடிடுங்கள் மறையுடல் உறுப்புகளாய் என்றும் ஒன்றித்து வாழ்ந்திடுங்கள் இறைவாக்குரைப்பவராய் இந்த இகமதில் திகழ்ந்திடுங்கள் தந்தை இறைவனின் சிறுமந்தையும் நீங்கள் ஆயனின் மேய்ச்சலில் புதுவாழ்வையும் கண்டிடுங்கள் அகஒளி ஏற்றிடவே தெய்வ அருள் ஒளி பெற்றிடுங்கள் பெற்ற இப்பெருவாழ்வை இங்கு பிறருடன் பகிர்ந்திடுங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Kulam Neenggal Paliyida Vaarunggal Iraivanukkuriyavarkal Enrum Iraipugazh Koorunggal Arasa Kurutthuvamae Thooya Aaviyin Aalayamae Iraivan Azhaittha Inamae Ithai Arinthu Vaazhmanamae Oliyin Maindhar Neenggal Indha Ulakinil Olirnthitunggal Mutivillaa Vaazhvathaiyae Neenggal Mudhanmudhal Thaetitunggal Maraiyudal Uruppugalaay Enrum Onritthu Vaazhnthitunggal Iraivaakkuraippavaraay Indha Igamathil Thigazhnthitunggal Thanthai Iraivanin Sirumanthaiyum Neenggal Aayanin Maeycchalil Puthuvaazhvaiyum Kantitunggal Agaoli Aerridavae Theyva Arul Oli Perritunggal Pertra Ipperuvaazhvai Ingku Pirarudan Pakirnthitunggal