பாடல் #1390
எட்டுத் திசைகளிலும்
🔤 Ettuth Thisaigalilum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எட்டுத் திசைகளிலும் இருந்தே கூட்டியே சேர்க்கப்பட்டோம் இயேசுவின் சத்தியத்தில்-இனிமேல் என்றும் நிலைத்திருப்போம் முன்னர் குறிக்கப்பட்டு-கர்த்தரால் முத்திரை போடப்பட்டோம் இத்தரை மீதினிலே-இனி நாம் இயேசுவுக்காய் வாழுவோம் சத்தியத்தை அறிந்தே-நித்திய தேவனை ஸ்தோத்தரிப்போம் பக்தியுடன் தொழுதே-இயேசுவின் நாமத்தைப் பாடிடுவோம் கர்த்தரின் பிள்ளைகளாய்-இனி நம்மை ஒப்புக் கொடுத்திடுவோம் எத்தனை துன்பத்தையும்-அவரால் முற்றும் ஜெயம் கொள்ளுவோம் வார்த்தையில் தேவன் வந்தார்-எம்மை வாழவைக்கப் பிறந்தார் பாவத்தில் மீட்டெடுத்தே-எமக்காய் பாடுகள் அனுபவித்தார் அன்பு சொரிந்தெமக்காய்-அவர் அல்லல் பல அடைந்தார் வள்ளலின் பேரன்பிலே-இனிமேல் என்றும் நிலைத்திருப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ettuth Thisaigalilum Irunthae Koottiyae Saerkkappattom Yesuvin Satthiyatthil-inimael Enrum Nilaitthiruppom Munnar Kurikkappattu-karttharaal Mutthirai Podappattom Ittharai Meethinilae-ini Naam Yesuvukkaay Vaazhuvom Satthiyatthai Arinthae-nitthiya Devanai Sthottharippom Pakthiyudan Thozhuthae-yesuvin Naamatthaip Paatituvom Karttharin Pillaigalaay-ini Nammai Oppuk Kotutthituvom Etthanai Thunbatthaiyum-avaraal Murrum Jeyam Kolluvom Vaartthaiyil Devan Vanthaar-emmai Vaazhavaikkap Piranthaar Paavatthil Meettetutthae-emakkaay Paatugal Anubavitthaar Anpu Sorinthemakkaay-avar Allal Pala Atainthaar Vallalin Paeranpilae-inimael Enrum Nilaitthiruppom