பாடல் #1385
எங்கே சுமந்து போகிறீர்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர் எங்கே சுமந்து போகிறீர்? 1. எங்கே சுமந்து போகிறீர்? இந்தக் கானலில் உமது அங்கம் முழுதும் நோக ஐயா என் யேசு நாதா? 2. பாவியினாலே வந்தப் பாரச் சுமையோ? இதை ஆவலுடன் எடுத்து ஆவி துடிக்கவும் நீர். 3. தோளில் பாரம் அழுத்த தூக்கப் பெலம் இல்லாமல் தாளுந் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர். 4. கைகள் அயர இரு கண்கள் இருளத் திரு மெய்யுங் கருக நாவும் மெத்த வறண்டு போக. 5. வஞ்சத் துரோகிகளால் வாதைப்பட்டது மிகக் கொஞ்சம் என்றோ இதையும் கூட எடுத்துக் கொண்டு. 6. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகித் தாங்கி வர. 7. தாயார் அழுது வர சார்ந்தவர் பின் தோடர மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர. 8. வல்ல பேயைக் கொல்லவும் மரணந்தனை வெல்லவும் எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும். 9. வண்டக் கள்ளர் நடுவில் மரத்தில் தொங்குவதற்கோ? சண்டாளர்களைத் தூக்கும் தலையோட்டு மேட்டுக்கோ? 10.மாசணுகாத சத்திய வாசகனே உமது தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து.