பாடல் #138
அன்புருவாம் எம் ஆண்டவா
🔤 Anpuruvaam Em Aandavaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. அன்புருவாம் எம் ஆண்டவா, எம் ஜெபம் கேளும், நாயகா நாங்கள் உம் ராஜ்ஜியம் ஆண்டாண்டும் பாங்குடன் கட்ட அருளும். 2. வாலிபத்தில் உம் நுகமே வாய்மை வலுவாய் ஏற்றுமே, வாழ்க்கை நெறியாம் சத்தியம் நாட்ட அருள்வீர் நித்தியம். 3. அல்லும் பகலும் ஆசையே அடக்கி ஆண்டு, உமக்கே படைக்க எம்மைப் பக்தியாய் பழுதேயற்ற பலியாய். 4. சுய திருப்தி நாடாதே, உம் தீர்ப்பை முற்றும் நாடவே வேண்டாம் பிறர் பயம் தயை, வீரமாய்ப் பின் செல்வோம் உம்மை. 5. திடனற்றோரைத் தாங்கிட, துக்கிப்பவரை ஆற்றிட வாக்கால் மனத்தால் யாரையும் வருத்தா பலம் ஈந்திடும். 6. எளிதாம் வாழ்க்கை ஏங்கிட, தீங்கற்ற இன்பம் தேடிட, மன்னிக்க முற்றும் தீமையை நேசிக்க மனு ஜாதியை.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Anpuruvaam Em Aandavaa, Em Jebam Kaelum, Naayakaa Naanggal Um Raajjiyam Aantaantum Paangkudan Katta Arulum. 2. Vaalibatthil Um Nugamae Vaaymai Valuvaay Aerrumae, Vaazhkkai Neriyaam Satthiyam Naatta Arulveer Nitthiyam. 3. Allum Pakalum Aasaiyae Adakki Aantu, Umakkae Pataikka Emmaip Pakthiyaay Pazhuthaeyartra Paliyaay. 4. Suya Thirupthi Naataathae, Um Theerppai Murrum Naadavae Vaentaam Pirar Payam Thayai, Veeramaayp Pin Selvom Ummai. 5. Thidanarroraith Thaangkida, Thukkippavarai Aarrida Vaakkaal Manatthaal Yaaraiyum Varutthaa Palam Eenthitum. 6. Elithaam Vaazhkkai Aengkida, Theenggartra Inbam Thaetida, Mannikka Murrum Theemaiyai Naesikka Manu Jaathiyai.