பாடல் #1340
உள்ளத்தின் ஆழம்
🔤 Ullatthin Aazham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உள்ளத்தின் ஆழம் பொங்குதே உத்தமரே உம் அன்பினால் பாத்திரம் நிரம்பி வழியுதே உன்னகத்தின் ஆவியினால் துதிப்பேன் களிப்பேன் மகிழ்வேன் மன்னவன் மார்பினிலே நேசத்தின் உச்சிதம் நேசரே கரையில்லையே உம் அன்பிற்கே கல்வாரி தரிசனம் தந்தீரே கருணையாய் தேற்றினீரே ஆனந்த கண்ணீர் நதியாக ஊற்றிடுவேன் உந்தன் பாதத்தில் பொன்முகம் நோக்கிப் பார்த்துமே பூரிப்பாய் வாழ்ந்திடுவேன் ரசத்தினால் பீறிடும் துருத்திபோல் அன்பென்னை நெருக்கி ஏவுதே ஊழியம் செய்ய தியாகமாய் தந்தேன் உம் சேவை செய்ய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ullatthin Aazham Pongkuthae Utthamarae Um Anpinaal Paatthiram Nirampi Vazhiyuthae Unnakatthin Aaviyinaal Thuthippaen Kalippaen Makizhvaen Mannavan Maarpinilae Naesatthin Uchsidham Naesarae Karaiyillaiyae Um Anpirkae Kalvaari Tharisanam Thantheerae Karunaiyaay Thaerrineerae Aanandha Kanneer Nathiyaaga Oorrituvaen Undhan Paadhatthil Ponmugam Nokkip Paartthumae Poorippaay Vaazhnthituvaen Rasatthinaal Peeritum Thurutthipol Anpennai Nerukki Aevuthae Oozhiyam Seyya Thiyaagamaay Thanthaen Um Saevai Seyya