பாடல் #1333
உலகில் பவப் பாரத்தால்
🔤 Ulakil Pavap Paaratthaal
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகில் பவப் பாரத்தால் சோரும் - இளைப் பூர்ந்த நரரே, வந்து சேரும். அலைசடிப் பட்டவரே, வாரும், - என்றன் ஆறுதலால் அவற்றைத் தீரும்; - பொல்லா - உலகில் 1.பாவி என்றெண்ணித் திகைப் போரும், - என்றன் பாவம் தீராதென் றிருப் போரும், ஆவலாய் ஓடி வந்து சேரும்; - நான் ஆகாமியர்க்காக வந்த தோரும்; - பொல்லா - உலகின் 2.இளமை என்றே எண்ணி, நில்லாதீர், - சாவும் இளமை என்று சொல்லிச் செல்லாதீர்; வளமாய் வருவதைத் தள்ளாதீர்; - கெட்ட வழக்க மிதையே கைக் கொள்ளாதீர். - பொல்லா - உலகில் 3.வாலிப கால மிதில் நாளும் - இன்ப வாழ்வு சுகிக்கவென்று மாளும் சீலரே, இன்றென் னுரை கேளும்; - அவை சேர்க்கும் நரகத்தில் எந்நாளும். - பொல்லா - உலகில் 4.காலம் கடந்த முதியோரே, - வீணாய்க் காலம் கழித்தே உழல்வோரே, காலமே தேட மறந்தோரே, - உங்கள் கவலையைத் தீர்ப்பேன், வருவீரே. - பொல்லா - உலகில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakil Pavap Paaratthaal Sorum - Ilaip Poorndha Nararae, Vanthu Saerum. Alaisatip Pattavarae, Vaarum, - Endran Aarudhalaal Avarraith Theerum; - Pollaa - Ulakil 1.paavi Enrennith Thikaip Porum, - Endran Paavam Theeraathen Rirup Porum, Aavalaay Oti Vanthu Saerum; - Naan Aakaamiyarkkaaga Vandha Thorum; - Pollaa - Ulakin 2.ilamai Enrae Enni, Nillaatheer, - Saavum Ilamai Enru Sollich Sellaatheer; Valamaay Varuvathaith Thallaatheer; - Ketta Vazhakka Mithaiyae Kaik Kollaatheer. - Pollaa - Ulakil 3.vaaliba Kaala Mithil Naalum - Inba Vaazhvu Sukikkavenru Maalum Seelarae, Inren Nurai Kaelum; - Avai Saerkkum Narakatthil Ennaalum. - Pollaa - Ulakil 4.kaalam Katandha Muthiyorae, - Veenaayk Kaalam Kazhitthae Uzhalvorae, Kaalamae Thaeda Maranthorae, - Unggal Kavalaiyaith Theerppaen, Varuveerae. - Pollaa - Ulakil