பாடல் #1331
உலகின் மாறா அன்பு
🎙 கிறிஸ்தவ பாடல்
உலகில் மாறா அன்பு உண்டு அதை இயேசுவிடம் நான் கண்டதுண்டு அது இயேசு அன்பு (2) கல்வாரி சிலுவை தந்த அன்பு உலக வாழ்வு வெறுத்த அன்பு உண்மையின் இரகசியம் தெரிந்த அன்பு இருண்ட வாழ்வை ஒழித்த அன்பு வறண்ட வாழ்வு செழித்த அன்பு நித்திய ஜீவன் தந்த அன்பு நித்தமும் எம்மை நடத்தும் அன்பு வாழ்வில் வெற்றி தந்த அன்பு வல்லவர் எம்மை நிரப்பும் அன்பு கருணை உள்ளம் கொண்ட அன்பு கண்மணிப் போலக் காக்கும் அன்பு கனிதரும் கொடியாய் படர்ந்த அன்பு கரும்பாய் என்றும் இனிக்கும் அன்பு