பாடல் #1320
உலகத் தோற்றம் முன்னென்னையும்
🔤 Ulakath Thortram Munnennaiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகத் தோற்றம் முன்னென்னையும் உன்னத தேவனே தெரிந்தெடுத்தீரே என்னில் நீர் செய்திடும் கிரியைகளை நான் எண்ணியே மகிழ்ந்தும்மை துதிப்பேனே 1. மன்னா உம் தயை என்னில் பெரிதல்லோ என்னரும் துணையானீரே மறவேன் உன்னை நான் என்றுரை செய்தவா மாறா உம் அன்பால் நடத்தும் 2. இந்த வனாந்திர பாதையிலே இன்னல்கள் பலவாய் சூழ்ந்திட்ட வேளையில் இன்புறும் மொழியால் என்னையும் தேற்றியே இன்ப கரம் கொண்டு நடத்தினீர் 3. விலக்குவேன் உன் வியாதி என வாக்குரை செய்தெந்தன் வைத்யருமானீரே யேகோவா ரொஃபேக்கா நீர் என்றும் எனக்கு என்னில் உம் ஜீவனும் பெருகுதே 4. தேவா உம் ஆவியால் நடத்தியே தேவ புத்திரனாய் என்னையும் மாற்றினீர் மண்ணாம் என் சரீரம் மகிமை பெற்றுமே விண்சாயல் அடைய செய்திடுவீர் 5. ஆவியின் வரங்கள் நிறைந்தோராய் ஆண்டவர் இயேசுவில் பூரணராகி நாம் ஆவலுடனவர் வரவை நோக்கியே ஆமென்! எம் இயேசுவே வாருமென்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakath Thortram Munnennaiyum Unnatha Devanae Therinthetuttheerae Ennil Neer Seythitum Kiriyaigalai Naan Enniyae Makizhnthummai Thuthippaenae 1. Mannaa Um Thayai Ennil Peridhallo Ennarum Thunaiyaaneerae Maravaen Unnai Naan Enrurai Seythavaa Maaraa Um Anpaal Natatthum 2. Indha Vanaanthira Paathaiyilae Innalkal Palavaay Soozhnthitta Vaelaiyil Inpurum Mozhiyaal Ennaiyum Thaerriyae Inba Karam Kontu Natatthineer 3. Vilakkuvaen Un Viyaathi Ena Vaakkurai Seythendhan Vaithyarumaaneerae Yaekovaa Rohpaekkaa Neer Enrum Enakku Ennil Um Jeevanum Perukuthae 4. Thaevaa Um Aaviyaal Natatthiyae Thaeva Putthiranaay Ennaiyum Maarrineer Mannaam En Sareeram Makimai Perrumae Vinsaayal Ataiya Seythituveer 5. Aaviyin Varanggal Nirainthoraay Aandavar Yesuvil Pooranaraaki Naam Aavaludanavar Varavai Nokkiyae Aamen! Em Yesuvae Vaarumenpom