பாடல் #1319
உலக மாயையிலே
🎙 கிறிஸ்தவ பாடல்
உலக மாயையிலே உழலும் என் நண்பா உலகம் ஒருநாள் கைவிடும் போது நீ எங்கே நண்பா என் நண்பா நண்பா - நீ அழகு மாயை இளமை மாயை அறிவாயோ நண்பா சாவை வென்ற சத்தியர் இயேசு உன்னை அழைக்கிறார் நண்பா - என் நண்பா பொன் பொருள் எல்லாம் உன்னை ஒரு நாள் கைவிடும் நண்பா புனித இயேசுவின் புண்ணியம் தேடிட புறப்படு நண்பா - என் நண்பா உறவுகள் எல்லாம் உன்னை ஒருநாள் உதறிடுமே நண்பா உத்தமரான சத்தியர் இயேசு உனக்கு உதவுவார் நண்பா - என் நண்பா நித்திய ஜீவனும் சத்திய வசனமும் நிலைத்திடுமே நண்பா நீதியின் சூரியன் இயேசுவிடம் வந்தால் நிம்மதி அடைந்திடுவாய் - என் நண்பா