பாடல் #1317
ஒருமுறை மாத்திரம் ஒருமுறை மாத்திரம்
🎙 கிறிஸ்தவ பாடல்
ஒருமுறை மாத்திரம் ஒருமுறை மாத்திரம் என் கண்ணீரின் ஜெபத்தை கேட்பீரோ களங்கம் நீக்கும் கனிவின் வல்லமை கண்களினால் நான் காணட்டும் காணட்டும் உலகத்தின் மாயையில் மயங்கியவர் சத்தியம் மறைக்கும் சுவிசேஷகர் கண்களை இழந்தும் சிம்சோன் போலே கதறி உம் சந்நிதி கூப்பிடவே இயேசுவே அளிக்கும் நிம்மதியை இழந்து அலையும் வாலிபரை ஈசோப்பினாலே சுத்திகரியும் ஜீவனின் ஊற்றுக்கள் புறப்படவே