பாடல் #1314
உருகாயோ நெஞ்சமே
🔤 Urukaayo Nenjjamae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.உருகாயோ நெஞ்சமே, குருசினில் அந்தோ பார்! கரங் கால்கள் ஆணி யேறித் திரு மேனி நையுதே! 2.மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை மாய்க்க வந்த மன்னவர்தாம், இந்நிலமெல்லாம் புரக்க ஈன குரு சேறினார். 3.தாக மிஞ்சி நாவறண்டு தங்க மேனி மங்குதே. ஏகபரன் கண்ணயர்ந்து எத்தனையாய் ஏங்குறார். 4.மூவுலகைத் தாங்கும் தேவன் மூன்றாணி தாங்கிடவோ? சாவு வேளை வந்தபோது சிலுவையில் தொங்கினார். 5.வல்ல பேயை வெல்ல வானம் விட்டு வந்த தெய்வம் பாராய். புல்லர் இதோ நன்றி கெட்டுப் புறம் பாக்கினார் அன்றோ? 6.நித்திய காலம் பாத்திரராய் நீசர் வாசஸ்தலம் உய்ய சத்திய தாசர் சித்தமேவும் சங்கை ராஜன் இங்குபார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.urukaayo Nenjjamae, Kurusinil Antho Paar! Karang Kaalkal Aani Yaerith Thiru Maeni Naiyuthae! 2.mannuyirkkaayth Thannuyirai Maaykka Vandha Mannavarthaam, Innilamellaam Purakka Eena Kuru Saerinaar. 3.thaaga Minjsi Naavarantu Thangga Maeni Mangkuthae. Aegaparan Kannayarnthu Etthanaiyaay Aengkuraar. 4.moovulakaith Thaangkum Devan Moonraani Thaangkidavo? Saavu Vaelai Vandhapothu Siluvaiyil Thongkinaar. 5.valla Paeyai Vella Vaanam Vittu Vandha Theyvam Paaraay. Pullar Itho Nanri Kettup Puram Paakkinaar Anro? 6.nitthiya Kaalam Paatthiraraay Neesar Vaasasthalam Uyya Satthiya Thaasar Sitthamaevum Sangkai Raajan Ingkupaar