பாடல் #1300
இதயமென்னும் வீட்டை
🔤 Idhayamennum Veettai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதயமென்னும் வீட்டை - நாம் புதியதாக மாற்றுவோம் நீதிபரன் இயேசு - நம் வீதி வழி வருவார் அலங்கரிப்போமே இன்றே அலங்கரிப்போமே ( 2 ) உலக பாவ மாசு நீக்கி துலங்க வைப்போமே ( 2 ) பாவக்கறை யாவுமே கழுவிடுவோமே பரிசுத்தம் எனும் வர்ணம் பூசிடுவோமே இருள் சூழ்ந்த அறைகளை நாம் திறந்திடுவோமே அருள் என்னும் ஒளி விளக்கை ஏற்றிடுவோமே ஏற்றிடுவோமே இன்றே ஏற்றிடுவோமே அருள் என்னும் ஒளி விளக்கை ஏற்றிடுவோமே வாசலண்டை நின்று வாழ வந்தேன் என்பார் நேசர் அவர் தொனி கேட்டு எழுந்திடுவாயே பாசமுடன் நீளும் அவர் கரங்களைப் பற்றி வாசம் செய்யும் தேவா என்று கூறிடுவோமே கூறிடுவோமே இன்றே கூறிடுவோமே வாசம் செய்யும் தேவா என்று கூறிடுவோமே இன்ப இயேசு இதயமதில் வாசம் செய்தால் துன்பம் என்று எதுவுமே உனை அணுகாதே தேவாதி தேவன் அவர் திடனளிப்பாரே ராஜாதி ராஜன் என்றும் சுபமளிப்பாரே சுபமளிப்பாரே வாழ்வில் சுபமளிப்பாரே ( 2 ) ராஜாதி ராஜன் இயேசு சுபமளிப்பாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Idhayamennum Veettai - Naam Puthiyathaaga Maarruvom Neethibaran Yesu - Nam Veethi Vazhi Varuvaar Alanggarippomae Inrae Alanggarippomae ( 2 ) Ulaka Paava Maasu Neekki Thulangga Vaippomae ( 2 ) Paavakkarai Yaavumae Kazhuvituvomae Parisuttham Enum Varnam Poosituvomae Irul Soozhndha Araigalai Naam Thiranthituvomae Arul Ennum Oli Vilakkai Aerrituvomae Aerrituvomae Inrae Aerrituvomae Arul Ennum Oli Vilakkai Aerrituvomae Vaasalantai Ninru Vaazha Vanthaen Enpaar Naesar Avar Thoni Kaettu Ezhunthituvaayae Paasamudan Neelum Avar Karanggalaip Parri Vaasam Seyyum Thaevaa Enru Koorituvomae Koorituvomae Inrae Koorituvomae Vaasam Seyyum Thaevaa Enru Koorituvomae Inba Yesu Idhayamathil Vaasam Seythaal Thunbam Enru Ethuvumae Unai Anukaathae Thaevaathi Devan Avar Thidanalippaarae Raajaathi Raajan Enrum Subamalippaarae Subamalippaarae Vaazhvil Subamalippaarae ( 2 ) Raajaathi Raajan Yesu Subamalippaarae