பாடல் #1291
அஸ்திபாரம் நிர்மூலமாகுதே
🎙 கிறிஸ்தவ பாடல்
அஸ்திபாரம் நிர்மூலமாகுதே ஆதி அன்பு தணிந்து போகுதே ஆத்தும பாரம் தீரவில்லையே என்ன செய்வாய் நீதிமான்களே ஊழியம் செய்ய ஒப்புவித்தேன் உண்மைப்பிதா உம் நாமத்தினால் உம் வசனம் ஒன்றே நம்பி வந்தேன் உம் வரம் தாரும் இந்த நேரம் வல்லமை தாரும் உண்மை நாதா வாழ்வில் பெலன் எல்லாம் குன்றினதே கல்லான உள்ளங்கள் கரைந்திடவே கனிவான ஊழியங்கள் தாரும் தேவா மாந்தர் எல்லோரும் மாறிவிட்டார் மறந்து விட்டார் உம் வசனங்களை மயங்குகிறார் இளைஞர் மாயையிலே மன்னவா என்ன செய்ய சித்தம் ஐயா