பாடல் #12794
இந்த பூமியிலே
🔤 Indha Poomiyilae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த பூமியிலே -2 இந்த பூமியிலே எனக்கென யாரும் இல்லை சொல்லிக் கொள்ள எவரும் இல்லை அன்பு காட்ட யாருமில்லை அணைத்திட ஒருவரில்லை இயேசைய்யா ....உம்மை விட்டால் எனக்கென யாருமில்லை ஆதரிக்க ஒருவரில்லை 1.வீட்டின் மேல் அமர்ந்திருகும் தனித்த குருவி போல வாடுகிறேன் வாடி தவிக்கிறேன் துணையாளரே .. தேற்றிட வாருமைய்யா ஆற்றிட வாருமைய்யா உம்மைவிட்டால் எனக்கென யாருமில்லை விடுவிக்க ஒருவரில்லை 2.அலைகடல் நடுவிலே அசைந்தாடும் படகிலே மருளுகிறேன் மடிந்து போகிறேன் நங்கூரமே .. அலைகடல் அதட்டுமையா அக்கரை சேருமையா உம்மைவிட்டால் எனக்கென யாருமில்லை அண்டிக்கொள்ள ஒருவரில்லை 3.உறவுகள் மறந்தாலும் உடைமைகள் இழந்தாலும் நம்புகிறேன் உம்மையே நம்பியுள்ளேன் என்னுயிரே .... என்னை நடத்துமையா இறுதிவரை நடத்துமையா உம்மைவிட்டால் எனக்கென யாருமில்லை வேறே ஒரு விருப்பமில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Poomiyilae -2 Indha Poomiyilae Enakkena Yaarum Illai Sollik Kolla Evarum Illai Anpu Kaatta Yaarumillai Anaitthida Oruvarillai Yesaiyyaa ....ummai Vittaal Enakkena Yaarumillai Aadharikka Oruvarillai 1.veettin Mael Amarnthirukum Thanittha Kuruvi Pola Vaatukiraen Vaati Thavikkiraen Thunaiyaalarae .. Thaerrida Vaarumaiyyaa Aarrida Vaarumaiyyaa Ummaivittaal Enakkena Yaarumillai Vituvikka Oruvarillai 2.alaigatal Natuvilae Asainthaatum Patakilae Marulukiraen Matinthu Pokiraen Nangkooramae .. Alaigatal Adhattumaiyaa Akkarai Saerumaiyaa Ummaivittaal Enakkena Yaarumillai Antikkolla Oruvarillai 3.uravugal Maranthaalum Utaimaigal Izhanthaalum Nampukiraen Ummaiyae Nampiyullaen Ennuyirae .... Ennai Natatthumaiyaa Iruthivarai Natatthumaiyaa Ummaivittaal Enakkena Yaarumillai Vaerae Oru Viruppamillai