பாடல் #12640
அழுகையோடும்
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
அழுகையோடும் புலம்பலோடும் என்னிடம் வருவாய் ஆறுதலாய் கரம் பிடித்து நடத்தி செல்லுவேன் 1. பாவத்திற்காய் வருந்தும் உள்ளத்தில் நான் தங்கிடுவேன் பாவம் செய்யா உள்ளத்தையே விரும்புகிறேன் பாவி உந்தன் உள்ளத்தை என்னிடம் தந்திடு பரலோக பலன்களாலே நிரம்பி வழிந்திடு 2.வருத்தம் நிறைந்த ஆத்துமாவை என்னிடம் தந்திடு வருந்தி கலங்கி தவிப்பதை நிறுத்திவிடு - உன் வருத்தங்கள் யாவையும் மறக்க செய்வேன் கண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவேன் 3.உடைந்து போன உள்ளத்தை என்னிடம் தந்திடு உண்மையாக என்னை நோக்கி நீ கூப்பிடு உள்ளான மனுஷனை புதிதாக்கிடுவேன் உன் சத்தம் இப்பொழுதே கேட்டிடுவேன்