பாடல் #12565
அறுப்புக்காலம்
🔤 Aruppukkaalam
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அறுப்புக்காலம் சென்றது கோடைக்காலமும் முடிந்தது இன்னும் ஏன் நீ இரட்சிப்பு பெறவில்லை இன்னும் ஏன் நீ குணமாகவில்லை 1.நாரை முதலாய் வேளை அறியும் காட்டுப்புறா தன் காலம் அறியும் என் ஜனமே நீ நியாயம் அறியாயோ என் ஜனமே (வருங் ) காலம் அறியாயோ நான் வருங்காலம் அறியாயோ 2.மாடு முதலாய் எஜமான் அறியும் கழுதை கூட தன் முண்ணனை அறியும் என் ஜனமே என்னை நீ மறந்தாயே என் ஜனமே அன்பை நீ உணராயோ என் அன்பை நீ உணராயோ 3.கீலேயாத்தில் தைலம் இல்லையோ ? நல்ல வைத்தியனும் அங்கே இல்லையோ ? இயேசு கிறிஸ்துவின் இரத்தம் இல்லையோ ? பாவம் மன்னிக்கும் இரட்சகர் இல்லையோ ? என் ஜனமே நீ மனம் திரும்புவாயா ? என் ஜனமே இன்றே நீ வருவாயா ? என்னிடம் நீ வருவாயா ?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aruppukkaalam Sendrathu Kotaikkaalamum Mutindhathu Innum Aen Nee Iratsippu Peravillai Innum Aen Nee Kunamaagavillai 1.naarai Mudhalaay Vaelai Ariyum Kaattuppuraa Than Kaalam Ariyum En Janamae Nee Niyaayam Ariyaayo En Janamae (varung ) Kaalam Ariyaayo Naan Varungkaalam Ariyaayo 2.maatu Mudhalaay Ejamaan Ariyum Kazhuthai Kooda Than Munnanai Ariyum En Janamae Ennai Nee Maranthaayae En Janamae Anpai Nee Unaraayo En Anpai Nee Unaraayo 3.keelaeyaatthil Thailam Illaiyo ? Nalla Vaitthiyanum Angkae Illaiyo ? Yesu Kiristhuvin Rattham Illaiyo ? Paavam Mannikkum Iratsakar Illaiyo ? En Janamae Nee Manam Thirumpuvaayaa ? En Janamae Inrae Nee Varuvaayaa ? Ennidam Nee Varuvaayaa ?