பாடல் #1237
புகழ் சொல்லி இயேசுவைப்பாடு
🎙 கிறிஸ்தவ பாடல்
புகழ் சொல்லி இயேசுவைப்பாடு பரிசுத்தர் நாமத்தைப் பாடு தரிசிக்கும் தேவனைப் பாடு தூயாதி தூயனைத் தேடு காரிருள் சூழ்ந்தாலும் பாடு கடல் ஆழங்களிலும் நீ பாடு கலங்காதே திகையாதே பாடு காத்திடும் கர்த்தனை நாடு பரலோக தேவனை போற்று பார்வோனை தாழ்த்தினார் போற்று கரம் தன்னில் வரைந்தாரே போற்று வரம் பெற புகழ்மாலை சாற்று அல்லேலூயா பாடி வாழ்த்து அல்பா ஒமேகாவை வாழ்த்து வல்லவர் உன் பக்கம் வாழ்த்து வல்லமை பெற்றிட தாழ்த்து