பாடல் #1188
உம்மண்டை கர்த்தரே
🔤 Ummantai Karttharae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மண்டை, கர்த்தரே நான் சேரட்டும். சிலுவை சுமந்து நடப்பினும், என் ஆவல் என்றுமே உம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வதே. தாசன் யாக்கோபைப்போல், ராக் காலத்தில் திக்கற்றுக் கல்லின்மேல் தூங்குகையில், என்தன் கனாவிலே உம்மண்டை, கர்த்தரே, நான் சேரவே நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம் விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம். தூதர் அழைப்பாரே உம்மண்டை, கர்த்தரே, நான் சேரவே. விழித்து உம்மையே நான் துதிப்பேன் என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன், என் துன்பத்தாலுமே உம்மண்டை, கர்த்தரே நான் சேர்வேனே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummantai, Karttharae Naan Saerattum. Siluvai Sumanthu Natappinum, En Aaval Enrumae Ummantai, Karttharae, Naan Saervathae. Thaasan Yaakkopaippol, Raak Kaalatthil Thikkarruk Kallinmael Thoongkukaiyil, Enthan Kanaavilae Ummantai, Karttharae, Naan Saeravae Neer Ennai Natatthum Paathai Ellaam Vin Ettum Aenipol Vilangkumaam. Thoodhar Azhaippaarae Ummantai, Karttharae, Naan Saeravae. Vizhitthu Ummaiyae Naan Thuthippaen En Thuyark Kallai Um Veetaakkuvaen, En Thunbatthaalumae Ummantai, Karttharae Naan Saervaenae.