பாடல் #1159
உம் அருள்பெற இயேசுவே
🔤 Um Arulpera Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் அருள் பெற, இயேசுவே, நான் பாத்திரன் அல்லேன், என்றாலும் தாசன் பேரிலே கடாட்சம் வையுமேன். நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே, நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே. ஆனாலும் வாரும் தயவாய், மா நேச ரட்சகா, என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய், என் பாவ நாசகா. நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன், நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன். தெய்வீக பான போஜனம் அன்பாக ஈகிறீர், மெய்யான திவ்விய அமிர்தம் உட்கொள்ளச் செய்கிறீர். என் பக்தி, ஜீவன் இதினால் நீர் விர்த்தியாக்குமேன், உந்தன் சரீரம் இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன் என் ஆவி, தேகம், செல்வமும் நான் தத்தம் செய்கிறேன், ஆ இயேசுவே, சமஸ்தமும் பிரதிஷ்டை செய்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Arul Pera, Yesuvae, Naan Paatthiran Allaen, Enraalum Thaasan Paerilae Kataatsam Vaiyumaen. Neer Enakkul Piravaesikka Naan Thakkon Allavae, Neer En Paazh Nenjsai Aasikka Nimittham Illaiyae. Aanaalum Vaarum Thayavaay, Maa Naesa Ratsakaa, Enraikkum Thangkum Aikkiyamaay, En Paava Naasakaa. Narkarunaiyaam Panthikkum Apaatthiran Aayinaen, Nar Seeraith Thanthu Ennaiyum Kannokkip Paarumaen. Theyveega Paana Pojanam Anpaaga Eekireer, Meyyaana Thivviya Amirtham Utkollach Seykireer. En Pakthi, Jeevan Ithinaal Neer Virtthiyaakkumaen, Undhan Sareeram Ratthatthaal Sutthaanggam Pannumaen En Aavi, Thaegam, Selvamum Naan Thattham Seykiraen, Aa Yesuvae, Samasthamum Pirathishtai Seykiraen