பாடல் #1158
உம் அன்பு போதும் என் அன்பர் இயேசு தேவா
🔤 Um Anpu Pothum En Anbar Yesu Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் அன்பு போதும் என் அன்பர் இயேசு தேவா உம்மோடு சேர என் உள்ளம் ஏங்குதையா 1. உம்மைப் போல் யாருமில்லை உண்மையாய் நேசித்திட கண்மணி போல் காத்து நடத்த சேற்றினில் வாழ்ந்த என்னைத் தூக்கி நீர் தேற்றினீரே கன்மலையின் மேலே நிறுத்த (உம்) 2. எள்ளளவும் கள்ளமில்லை கடுகளவும் கபடமில்லை திடமனதாய் உம்மை நம்புவேன் சொல்லொண்ணா உந்தன் நேசம் சொல்லாமல் ஜீவிப்பேனோ என் தேச எல்லையெங்குமே (உம்) 3. அழுகையின் பள்ளத்தாக்கின் நடுவே நான் நடந்தபோது நீரூற்றாய் மாற்றி தந்தீரே பெலத்தின் மேல் பெலனடைய சீயோனை வந்தடைய தந்தீரே உந்தன் கிருபை (உம்) 4. மாமிச தேகமுள்ள யாவுக்கும் ஆகாரத்தை ஈந்திடும் எந்தன் இயேசுவே பெருங்கடல் திமிங்கலமும் உம் கரம் நோக்கிடுமே நீர் தர வாங்கிக் கொள்ளுமே (உம்) 5. நித்திய நம்பிக்கையை என்னுள்ளில் வைத்த நேசர் சத்தியம் என்னை மீட்பதே உத்தம உள்ளத்தோடு உம்மைப் பின்பற்றிடவே நித்திய பெலன் தாருமே (உம்) 6. வெள்ளியிலும் பொன்னிலுமல்ல விலையுயர்ந்த வஸ்திலுமல்ல இரத்தத்தால் என்னை மீட்டிரே எந்தன் விசுவாசத்தாலே ஏகிடுவேன் உந்தன் பாதம் ஏற்றிடுவீர் உந்தன் பரத்தில் (உம்) 7. நெருக்கத்தில் கூப்பிட்டேனே உருக்கமாய் ஓடிவந்து திருக்கரம் கொண்டு அணைத்தீர் இடக்கரம் தாங்கும்போது வலக்கரம் அணைத்திடுமே உம் நேசம் என்னை வென்றதே (உம்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Anpu Pothum En Anbar Yesu Thaevaa Ummotu Saera En Ullam Aengkuthaiyaa 1. Ummaip Pol Yaarumillai Unmaiyaay Naesitthida Kanmani Pol Kaatthu Natattha Saerrinil Vaazhndha Ennaith Thookki Neer Thaerrineerae Kanmalaiyin Maelae Niruttha (um) 2. Ellalavum Kallamillai Katugalavum Kapatamillai Thidamanathaay Ummai Nampuvaen Sollonnaa Undhan Naesam Sollaamal Jeevippaeno En Thaesa Ellaiyengkumae (um) 3. Azhukaiyin Pallatthaakkin Natuvae Naan Natandhapothu Neeroorraay Maarri Thantheerae Pelatthin Mael Pelanataiya Seeyonai Vandhataiya Thantheerae Undhan Kirupai (um) 4. Maamisa Thaegamulla Yaavukkum Aakaaratthai Eenthitum Endhan Yesuvae Perunggatal Thiminggalamum Um Karam Nokkitumae Neer Thara Vaangkik Kollumae (um) 5. Nitthiya Nampikkaiyai Ennullil Vaittha Naesar Satthiyam Ennai Meetpathae Utthama Ullatthotu Ummaip Pinbarridavae Nitthiya Pelan Thaarumae (um) 6. Velliyilum Ponnilumalla Vilaiyuyarndha Vasthilumalla Ratthatthaal Ennai Meettirae Endhan Visuvaasatthaalae Aekituvaen Undhan Paadham Aerrituveer Undhan Paratthil (um) 7. Nerukkatthil Kooppittaenae Urukkamaay Otivanthu Thirukkaram Kontu Anaittheer Idakkaram Thaangkumpothu Valakkaram Anaitthitumae Um Naesam Ennai Vendrathae (um)